Jul 31, 2010

சமூக நல்லிணக்கம்[3

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் வாழ்க்கை முழுதும் ,இது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. நபியவர்களிடம் வேலைச் செய்த யூத சிறுவன் ஒருவன்,நோய்வாய்ப்பட்டு இருந்தபோது, அவரை நலம் விசாரிக்க அன்னார் சென்ற நிகழ்ச்சி,நபியின் நல்லிணக்கம் மிகுந்த நன் நடத்தையை நினைவூட்டுகிறது.

ஒரு போரிலிருந்து திரும்புகின்ற வழியில் அன்னாருக்கு ஒரு யூதப்பெண் விருந்து கொடுத்த போது அதனை ஏற்றுக்கொண்டு விருந்துண்ண சென்றார்கள், அன்றைய சூழ் நிலையில் முஸ்லிம்களுக்கு பரம விரோதிகள் யூதர்களே; என்ற நிலையிருந்தும், அண்ணலாரின் இந்த சம்மதம்,அன்னாரின் ஐக்கிய உணர்வுக்கு,ஓர் அழகான அடையாளம்,என்று சொல்லலாமல்லவா?.

ஒரு முறை நபிகளாரின் உயிர் நண்பர் அபூ பக்கர் [ரழி] அவர்கள்,யூதர்கள் குழுமியிருந்த இடத்தைக் கடந்து சென்றபோது, சின்ன வாக்குவாதம் ஏற்பட்டு, அபூபக்கர்[ரழி] அவர்கள்,ஃபனுஹாஸ் என்ற ஒரு முக்கிய யூதரை ஓங்கி அறைந்து விட்டார்கள்; இந்த பிரச்சனையை யூதர்கள், நபியவர்களிடம் எடுத்துச்சென்று நியாயம் கேட்டார்கள்; காரணம்; அண்ணலாரின் பாராபச்சமற்ற, பரஸ்பர நடவடிக்கையேயாகும்.

மற்றொரு முறை, ஒரு யூதருக்கும்,முஸ்லிமாக நடித்துக்கொண்டிருந்த ஒருவருக்கும்,நிலம் சம்பந்தமாக ஒரு பிரச்சனை;யூதர்,"முஹம்மதிடம் செல்லாம்,அவர்தான் நியாயமாக தீர்ப்பு வழங்குவார்"எனக் கூறினார். ஆனால் முஸ்லிமாக ஏமற்றிக்கொண்டிருந்த[நயவஞ்சகரான]வர் மற்றவர்களிடம் செல்லலாம்,என அழைத்தார். காரணம்;நபியிடம் சென்றால், நமக்கு நியாயம் கிடைக்கும்.என்று யூதர் நினைத்தார்,ஆனால்;அவர்களிடம் சென்றால்,நமக்கு சாதகமாக[நியாயமின்றி]அவர் தீர்ப்பு வழங்க மாட்டார்.என்று, அந்த நயவ்ஞ்சகர் எண்ணினார்.

இன் நிகழ்ச்சி"மாற்றாரும் கூட முஹம்மத்[ஸல்] அவர்களின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தனர்,என்பதை சித்தரிக்கிறது."நீதிக்கு புறம்பாக தனது சமூகத்துக்கு உதவி செய்பவன்,கிணற்றில் விழும் ஒட்டகத்தின் வாலைப்பிடித்தவன் போலாவான்," என்ற தனது பொன் மொழிக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார்கள், அந்த நபிகள் நாயகம்[ஸல்]அவர்கள்.
நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கையில் ஒரே இறைவன் என்ற கொள்கையை ஓங்கி ஒலித்தார்களே தவிர, மற்ற மக்களால் தெய்வங்களாக நம்பப்படுகிற எதையும் திட்டியதோ அதனை வசை பாடியதோ கிடையாது.காரணம் இது அன்னாரின் நாகரீகம் என்றும் கூறலாம்,அதே சமயம் அல்லாஹ்வின் கட்டளையும் அதுவாகத்தான் இருந்தது.அல்லாஹ் .கூறுகிறான்:[நம்பிக்கையாளர்களே!]அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் இறைவன் என அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.[6:108] இவ்வசனத்தின் இலக்கணமாகவே இறைத்தூதர் அவர்கள் வாழ்ந்தார்கள். இஸ்லாம் தனது இனிய அணுகு முறைகளால் நாளுக்கு நாள் வளர்ந்த்து வருவதை பொறுக்க முடியாத எதிரிகள் முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை தந்தனர்,அவற்றை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயச்சூழ் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர்.அதனால் உண்டானவைதான் அன்றைய போர்கள்.போர் என்றாலே மனிதம் செத்துப்போய் விடும் என்பதை நாம் அறிவோம். அத்தகைய போரிலும் நபியின் போதனை வித்தியாசமாகவும்,விசித்திரமாகவும் இருக்கும்.போருக்கு புறப்படும் வீரர்களை நோக்கி,"அல்லாஹ்வின் அணியினரே!எதிரிகளின் அணியில் இருக்கும் பெண்களையோ, குழந்தைகளையோ,அந்த பகுதியின் ஆலயங்களிலும் கோவில்களிலும் மக்களுக்கு குருக்களாக இருந்து வணக்கம் நடத்துகின்ற மத போதகர்களையோ கொல்லாதீர்கள்.அந்த மக்களின் வணக்க இடங்களை இடிக்காதீர்கள்.அந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ள விவசாயங்களை சேதப்படுத்தாதீர்கள்,ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தவர்களைக் கொல்லாதீர்கள்".என்று உபதேசம் செய்வார்கள்.இவை மட்டுமல்ல. இன்னும் அனேக எடுத்துக்காட்டுகள் உள்ளன்.இவையாவும் நமக்கு போதிக்கும் செய்தி ஒன்றுதான்.அதாவது இஸ்லாம் வன்முறை மார்க்கமல்ல,மாறாக,எல்லா வகையிலும் சமூகத்தின் நல்லிணக்கத்தையும் நன்மையையுமே நம் இலட்சியமாகக் கொள்ளவேண்டும்,என்பதே அந்த செய்தி.இதுவே நம் வழியாக மாறினால் நம் வாழ்வு முழுவதும் ஆனந்தம் பொழியும்,பொழிய வேண்டும்.பாடுபடுவோம் வாருங்கள்! [நல்லிணக்கம் தொடரும்.....]

Jul 28, 2010


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திரு நாமத்தால்...

எல்லாப் புகழும் இறைவனுக்கு,
அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு.

சமூக நல்லிணக்கம்[2]

வரலாற்று ஒளியில் நம் நெஞ்சை நெகிழவைக்கும் மற்றொரு நிகழ்ச்சியையும் காணுகிறோம்;நபியவர்களுக்கு நபிப்பட்டம் கிடைப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்[நபியின் 35 -வது வயதில்] கஃபா புதுப்பித்துக் கட்டும் பணி நடைபெற்றது, வேலை வெற்றிகரமாக முடியும் நிலையில் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று வெடிக்கிறது; "ஹஜ்ருல் அஸ்வத்" என்ற புனிதக் கல்லை அதன் இடத்தில் எடுத்து வைத்து பதிப்பது யார்? அந்த பாக்கியம் தங்களுக்கே வேண்டும் ; என்று அவர்களில் ஒவ்வொருவரும் வாதிட்டார்கள். நிறைவடைய இருந்த புனித வேலை தடைப்பட்டு முடங்கி நின்றது; இதை எதிர் கொள்வது எப்படி என்று வழி தெரியாமல் தலைவர்கள் விழி பிதுங்கி நின்றார்கள். இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டி,மக்காவில் வாழும் அனைத்து கிளையினரும் ஒன்றுகூடி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அதில் எடுக்கப்பட்ட முடிவாவது;"நாளை அதிகாலையில் விடியும்முன் முதன்முதலாக எவர் [ ஹரம் என்ற அந்தப்] பள்ளிக்குள் நுழைகிறாரோ அவரே அந்த கல்லை எடுத்து வைப்பார்". முடிவின்படி அதைக்கண்காணிக்க ஒரு குழு நியமனம் செய்யப்பட்டு கண்காணித்துக்கொண்டிருந்தனர். அதிகாலைக்கருக்கல் நேரம், ஒரு உருவம் மெதுவாக உள்ளே நுழைந்து; கஃபா வுக்கு முன் சென்று, தொழுகையை ஆரம்பித்தது. கண்காணித்தவர்கள்,ஓடிச்சென்று "யார் அந்த பாக்கியசாலி" என்று ஆவலோடு பார்த்து விட்டு;இதோ இவர் நம்பிக்கையாளர், உண்மையாளர்,என்று சப்தம்போட்டு அழைத்தனர். ஓடி வந்த மக்கள் அங்கு நின்றுகொன்டிருந்த முஹம்மத் நபி[ஸல்] அவர்களைப் பார்த்து"இவர்தான் இதற்கு தகுதியானவர்" எனக்கூறியவர்களாக; அவர்களது கரத்தைப் பிடித்து வாழ்த்துக்கூறினார்கள். விடிந்த பிறகு "புனிதக்கல் பதிக்கும் நிகழ்ச்சி" நடை பெறுகிறது; அதனைக்காண மக்கள் கூட்டம் அலைக்கடலெனத் திரண்டிருக்க,நபியவர்கள், தனது தோளில் கிடந்த கணமான ஒரு துணியை எடுத்து கீழே விரித்து அதன் மீது அந்த புனிதக்கல்லை தூக்கி வைத்துவிட்டு, அங்கு ஓர் அறிவிப்பு செய்கிறார்கள்;"மதிப்பு மிகுந்த இந்த மக்காவின் கிளையார்களின் தலைவர்கள் தயவு செய்து முன்னால் வாருங்கள்!; ஒன்றும் புரியாத அந்த தலைவர்கள் முன்னால் வந்து நிற்கிறார்கள். அவர்களை நோக்கி நபியவர்கள்; இந்த துணியின் ஓரங்களைப் பிடித்து தூக்குங்கள்! என்று கூற அவர்களும் தூக்கினர். உடனே அன்னார் அந்த கல்லை எடுத்து அதன் இடத்தில் வைத்தார்கள். பிரச்சினை முடிவுக்கு வர,மக்கள் மகிழ்ச்சியோடு களைந்து போனார்கள். தனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பைப் பயன் படுத்தி தான்பெரியாளாக வேண்டும் என்று எண்ணி விடாமல், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற கொள்கையோடு அனைத்து சமூக மக்களையும் நல்லிணக்கத்தோடு அரவணைத்து வாழ்ந்த இந்த பாங்கு யாருக்கு வரும்?. "ஒரே இறைவன்" என்ற கொள்கைப் பிரச்சாரம் பிடிக்காத ஒரே காரணத்திற்காக பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட அன்னாரின் மீது ஒரு வயதான மூதாட்டி ஒவ்வொரு நாளும் குப்பைகளை கொட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்,ஆனால் ஒரு குப்பை விழாததைக் கண்ட அவர்கள்;எங்கே அந்த நல்லிணக்கம் தொடரும்...மூதாட்டி ?' என்று விசாரிக்க, அவர் நோய் வாய்ப்பட்டுள்ளார்,என்று கூறப்பட்ட போது; அவரது வீடு தேடிச்சென்று"தாயே! எப்படி இருக்கிறீர்? தங்களுக்கு ஏதாவது உதவி தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள்;"என்று அன்போடு விசாரித்த போது நெகிழ்ந்து போன அந்த தாய்,அக்கணமே இஸ்லாமிய மார்க்கத்தில் இணைந்தார். இத்தகைய நெஞ்சை நெகிழ வைக்கும் நிஜமான நிகழ்ச்சிகள் ," நபிகளாரின் நல்லிணக்க வாழ்வுக்கு நற்சான்றுகள்" நல்லிணக்கம் தொடரும்....

Jul 27, 2010

சமூக நல்லிணக்கம்.[1]

இந்த உலகம் முழுவதும் விரிந்து காணப் படும் உயரிய மார்க்கமகிய இஸ்லாம் என்றவிருட்சம்,தனது அமைதிஎன்ற தென்றலை அகிலம் முழுவதும்தவழ
வைத்துக்கொண்டுள்ளது. இஸ்லாம் என்ற இந்த மார்க்கத்தை நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் உலகில் எடுத்துச்சொல்ல ஆரம்பித்த போது மிகப்பெரிய எதிர்ப்புகளும் சோதனைகளும் சூராவலியாய் வீசின .என்னதான் எதிற்புகள் வந்தாலும் சொல்லப்பட்ட கருத்துகளும் அவற்றுள் பொதிந்திருந்த சமத்துவ நீதிகளும் பின் தங்கிய மக்களையும் விடுதலைக்காக ஏங்கிய வறியவர்களையும் இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டுவந்து இணைய வைத்தன. பின் தங்கிய மக்களின் மறுமலர்ச்சிக்காக பாடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் தட்டு மக்களின் எதிர்ப்பை சம்பாதிதுக்கொள்ளவேண்டும் என்பது தெரிந்த ஒன்றுதான், அவ்வாறே நபிகள் நாயகம்[ஸல்]அவர்களுக்கு அந்த மக்கள் பலமான எதிர்ப்பைக்காட்டினாலும் அந்த மக்களின் உள்ளங்களில் நபியின் மரியாதை நிரைந்தே இருந்தன, "அஸ்ஸாதிq" [உண்மையாளர்] "அல் அமீன்"[நம்பிக்கையாளர்]என்ற நபியைப்பற்றிய நற்குணத்திரு நாமங்கள் aவர்களின் பாறைப்போன்ற இதயங்களில் கல்வெட்டுக்களாக பதிந்திருந்தன.காரணம் அன்றைய மக்களிடம் அன்னார் ஏற்றத்தாழ்வின்றி பாகுபாடின்றி அன்போடும் கருணையோடும் நெறியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டார்கள்,அதேசமயம் அவர்களின் முரண்பாடன கொள்கைகளுக்கு ஒத்துப்போகக்கூடியவர்களாகவும் இருக்கவில்லை. சுருங்கச்சொன்னால் உயிரை நேசித்தார்கள் ஊடல்களை நேசிக்கவில்லை மனிதனை நேசித்தார்கள் சொந்த மாசுகளையும் மாயைகளையும் நேசிக்கவில்லை. மேலும் அவர்களுக்குள் ஊடுருவிப்போயிருந்த பாழாய்ப் போன பழக்க வழக்கங்களைக் கண்டு வருந்தினார்கள், அவற்றைக் களைவது எப்படியென்று கவலைப்பட்டார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். இன வெறியும்,மொழி வெறியும் மிகுந்த அன்றைய அரபு மக்களின் உள்ளத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரு குடும்பம்,ஒரு சமூகம் என்ற மகத்தான மனித நேயத்தை பதிய வைத்தார்கள். அருள் மறை குர் ஆனின் வசனமாகிய"மனிதர்களே!உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண்,ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம்.பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்,(அதனை வைத்து பெருமையடித்துக் கொள்வதற்காக அல்ல)"[49:13]என்ற வசனத்தின் விளக்கமாகவும் முன்மாதிரியாகவும் வாழ்ந்தார்கள் சிறுவராய் இருந்த ஃஜைத் என்பவர் மக்கவின் கடைத்தெருவில் வைத்து அடிமையாக விற்பனைச்செய்யப்பட்டார்,அவரைவிலைகொடுத்து வாங்கிய முஹம்மத் [ஸல்] அவர்களின் அருமை மனைவி கதீஜா அம்மையார் அவர்கள் அவரை தனது கணவருக்கு அன்பளிப்பு செய்து இவரை பணிவிடைக்காக வைத்துக்கொள்ளுங்கள்,எனக்கூறினார்கள். அந்த ஜைத் மக்கவின் உயர் குடும்பாகிய குரைஷி கூட்டத்தைச்சார்ந்த்தவரும் அல்லர்,அல்லது அந்த ஊரைச்சார்ந்தவரும் அல்லர், அப்படியிருந்தும் நபியவர்கள் அவரிடம் வேற்பாடு எதுவும் காட்டாமல் தன் சொந்த் பிள்ளையைப்போன்று அரவணைத்துக்கொண்டதால் அவர் நபியை தனது பெற்றோரை விட நேசித்தார். சில வருடங்களுக்குப்பிறகு அவருடைய பெற்றோர் இவர் இருக்கும் இடத்தைக்கேள்விப்பட்டு ஆவலோடு வந்து அள்ளி அணைத்துக்கொண்டு ஆனந்தமடைந்தார்கள். அதன் பிறகு அண்ணலார் நபி [ஸல்] அவர்களிடம் சென்று எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம், எங்கள் மகனை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறிய போது,நற்குண நாயகம்[ஸல்] அவர்கள் கூறினார்கள்:இவர் உங்களுடைய மகன், உங்களுக்கு சொந்தமானவர், அவரும் நீங்களும் விரும்பினால் தாராளமாக அழைத்துப்போகலாம், அதற்காக எனக்கு எந்த தொகையும் தேவையில்லை. ஜைதின் பெற்றோர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை, பிரச்சினை இவ்வளவு இலகுவாக முடியுமென்று நினைக்கவேயில்லை,தங்களின் செல்ல மகன் ஜைதிடம் சென்றார்கள், மகனே! உன்னை அழைத்துச்செல்ல முஹம்மதிடம் அனுமதி பெற்று விட்டோம்;எனவே உடனே புறப்படு; நம் பந்தங்கள் உன்னைப்பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள், என்று கூறினார்கள். இதனைக்கேட்ட மகன் ஜைத், "எனதருமைப்பெற்றோர்களே!தங்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி; ஆனால் நான் தங்களோடு வரமுடியாது;காரணம் எனது நேசர் நபி [ஸல்] அவர்களை விட்டு விட்டு ஒரு போதும் என்னால் இருக்கமுடியாது,"என்று கூறினார். அவரது இந்த பதில் நபியின் அன்பான அணுகு முறையை அடையாளப்படுத்துகிறது .நல்லிணக்கம் தொடரும்...

Jul 22, 2010

சந்தேகம் மற்றும் புறம்

நம்பிக்கையளர்களே! அநேகமாக சந்தேகத்திலிருந்து நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். ஏனென்றால், நிச்சயமாக சில சந்தேகங்கள் பாவமானவைகளாக உள்ளன. எவருடைய குற்றத்தையும் நீங்கள் துருவித்துருவி விசாரித்துக்கொண்டிருக்க வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவெரையும் புறம் பேச வேண்டாம், உங்களில் எவராவது தனது சகோதரனுடைய மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! [புறம் பேசுவதும் அவ்வறே,இவ்விஷயங்களில்] அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் [பாவத்திலிருந்து] விலகுபவர்களை அங்கீகரிப்பவனும் கிருபை செய்பவனாகவும் இருக்கிறான். அல்குர் ஆன்,49:12

Jul 20, 2010

குறை கூறவேண்டாம்

அல்லாஹ் கூறுகிறான்:நம்பிக்கையாளர்களே!எந்த ஆண்களும் மற்ற எந்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம்,அவர்கள்[அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும் ]இவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.அவ்வாறே எந்த பெண்களும் மற்ற எந்த பெண்களையும்[பரிகாசம் செய்ய வேண்டாம்]அவர்கள் [பரிகாசம் செய்யும்]இவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்.உங்களில் ஒருவர் மற்ற எவரையும் இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம்,உங்களில் ஒருவர் மற்றவருக்கு[த்தீய]பட்டப்பெயர் சூட்ட வேண்டாம்,நம்பிக்கைக் கொண்டதன் பின்னர்,கெட்டப்பெயர் சூட்டுவது மகா கெட்ட பாவமாகும்.எவர்கள் [இவைகளிலிருந்து]விலகிக்கொள்ளவில்லையோ அவர்கள்தான் [வரம்பு மீறிய]அநியாயக்காரர்கள்.அல் குர்,ஆன்:49:11.

பொறாமை

¿À¢[…ø]«Å÷¸û «ÕǢɡ÷¸û:±îº¡¢ì¨¸ ¦À¡È¡¨Áì ÌÉò¾¢Ä¢ÕóÐ ¯í¸¨Çô À¡Ð¸¡òÐ즸¡ûÙí¸û!¦¿ÕôÒ Å¢È¨¸ ±¡¢òÐõÀġ츢 Å¢ÎŨ¾ô §À¡Ä þó¾ ¦À¡È¡¨Á ¯í¸û ¿ü¦ºÂø¸¨Çô À¡Æ¡ì¸¢ Ţθ¢ÈÐ. áø:«â¾¡çò.


நபி[ஸல்]அவர்கள் கூறினார்கள்:எனது நிலையும் மக்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலைக்கு ஒப்பாகும்,ஒரு மனிதர் தீ மூட்டினார் அதன் ஒளியைக் கண்ட விட்டில் பூச்சுக்களும் மற்ற பூச்சுக்களும் அந்த தீயில் வந்து விழ வந்தன, அந்த மனிதர் அவற்றைத் தீயில் விழாதவாறு தடுத்துக்கொண்டிருந்தார், ஆனால் அவை அத்தடையையும் மீறி அத் தீயில் விழுகின்றன, இதைப் போலத்தான் [பாவங்களைப்புரிந்து]நரக நெருப்பில் விழாமல் உங்களைத்தடுக்க உங்கள் இடுப்புகளைப் பிடித்து இழுத்து நான் தடுக்கின்றேன், ஆனால் நீங்கள் என் தடையையும் மீறி அந்த நரகில் விழ முயல்கிறீர்கள்.நூல்:புகாரி.

Jul 19, 2010

எங்கள் இறைவா!

எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகிலும் நாளை மறுமையிலும் அழகிய நல்லருளை தருவாயாக!எங்களை நரக வேதனையை விட்டும் பாதுகாப்பாயாக!ஆமீன்