Aug 31, 2010

5-வது நாள் [சமாதானம் செய்வது].

link

அல்லாஹ் கூறுகிறான்:[நபியே!]அவர்கள்[உங்களுடன்]பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை.ஆயினும் தானம் கொடுப்பதைப் பற்றியோ,நன்மையானவற்றைப் பற்றியோ,மனிதர்களுக்கு மத்தியில் சமாதானம் ஏற்படுத்துவதைப் பற்றியோ பேசுபவற்றைத் தவிர.ஆகவே,எவரேனும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி இவ்வாறு [இரகசியம்]பேசினால்[மறுமையில்]நாம் அவர்களுக்கு மகத்தான[நற்]கூலியை வழங்குவோம்.[4:114]. சகோதரர்களே! இன்று நாம் எடுத்துக் கொண்டத் தலைப்பு சமாதானம் செய்து வைப்பது.ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய பண்புகளில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.காரணம் இனம் மொழி நிறம் பேசி பிரிந்து போனவர்களைப் பற்றி பேசுவது ஒருபக்கமிருக்க,ஒரே இறைவன் என்ற கொள்கையில் பிடிப்போடு இருக்கும் நம்மவர்களைப் பற்றி சற்று நிதானமாக சிந்தித்துப் பார்ப்போம்,வரட்டு வாதம் பேசி முரட்டுத் தனம் காட்டும் சிலபேரின் நடவடிக்கைகளால் ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு ஊரிலும் பிரிவினைவாதம் தலைத் தூக்கியுள்ளன.ஃபிர் அவ்ன் என்ற கொடுமைக்கார மன்னனிடம் மூஸா[அலை]அவர்களையும்,ஹாரூன்[அலை]அவர்களையும் நியாயத்தையும் ஓரிறைக் கொள்கையையும் எடுத்துக் கூற அனுப்பிய அல்லாஹ்,அவ்விருவரையும் நோக்கி கூறியதை அன்பு சகோதரர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.அல்லாஹ் கூறுகிறான்:நீங்கள் இருவரும் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள்,அவன் நல்லுணர்ச்சி பெறலாம்.[20:44].சரி நமது தலைப்புக்கு வருவோம்.அன்பானவர்களே!அல்லாஹ் கூறுகிறான்:நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் [முஃமிங்கள்]அனைவரும் சகோதரர்களே,ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் சமாதானம் செய்து வையுங்கள்!.இதன் காரணமாக நீங்கள் அவனுடைய அருளை அடைவீர்கள்.[49:10].ஒரு முறை நபி[ஸல்]அவர்கள் [தோழர்களே!]நோன்பு,தொழுகை,தர்மம் இவற்றுக்காக கிடைக்கும் கிடைக்கும் பதவிகளை விட சிறந்த பதவிக்குரிய நற்காரியம் ஒன்றை உங்களுக்கு கூறட்டுமா?.என்று வினவ,அவசியம் கூறுங்கள்!அல்லாஹ்வின் தூதரே! என தோழர்கள் பதில் கூறினார்கள்.நபியவர்கள் கூறினார்கள்:[சண்டையிட்டுக்கொண்ட]இருவருக்கு மத்தியில் சமாதானம் செய்து வையுங்கள்,மாறாக இருவருக்கு மத்தியில் குழப்பங்களை உண்டாக்குவது,நன்மைகளை இல்லாமல் ஆக்கிவிடும்.[நூல்:திர்மிதி,அபூதாவூத்]மற்றொரு நபி மொழியில்:"இரண்டு பேருக்கு மத்தியில் சமாதானம் செய்து வைப்பவர் [ஒருபோதும்]பொய் சொன்னவராக ஆக மாட்டார்,அவர் நல்லதையே கூறுகிறார்,நன்மையை வளர்க்கிறார்".[நூல்:முஸ்லிம்].என்று வந்துள்ளது.மற்றொரு நபி மொழியில்:"மனித உடலில் உள்ள அனைத்து மூட்டுகளுக்குப் பகரமாகவும் சூரியன் உதயமாகும் ஒவ்வொரு நாளும் தர்மம் கொடுக்க வேண்டும்,இருவருக்கு மத்தியில் நீதம் செலுத்திசமாதானத்தை உண்டாக்குவதும் தர்மமே,தன் வாகனத்தில் ஒருவரை ஏற்றி உதவுவதும் தர்மமே,அல்லது அவரது சுமையை தம் வாகனத்தில் ஏற்றி உதவுவதும் தர்மமே,நல்ல வார்த்தையைக் கூறுவதும் தர்மமே,தொழுகைக்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் தர்மமே,பாதையில் இடர் தரும் பொருட்களை அகற்றுவதும் தர்மமே.என்று கூறப்பட்டுள்ளது.[நூல்:புகாரி,முஸ்லிம்].ஒரு முறை நபி[ஸல்]அவர்கள் தனது மூத்த பேரன் ஹஸன்[ரழி]அவ்ர்களைக்காட்டி"இதோ இந்த எனது பேரர் ஒரு தலைவராவார்,[பிற்காலத்தில்]முஸ்லிம்களின் இரு பெரும் கூட்டங்களுக்கிடையே சமாதானம் செய்து வைப்பார்"[நூல்:புகாரி]அவ்வாறே பிற்காலத்தில் முஆவியா[ரழி]அவர்களோடு சண்டை செய்யும் சூழ் நிலை ஏற்பட்ட போது சமாதான நாயகராகத் திகழ்ந்தார்கள். நபி[ஸல்]அவர்களின் முப்பத்தி ஐந்தாவது வயதில் கஃபா கட்டப் பட்ட போது ஹஜ்ருல் அஸ்வது கல்லை அதன் இடத்தில் பதிப்பது யார்? என்ற பிரச்சனை எழுந்தபோது,அதை ஏற்படுத்திக் பிரச்சனையும் இன்றி அனைவருக்கும் அந்த வாய்ப்பை ஏற்ப்டுத்திக் கொடுத்து சமாதானம் செய்து வைத்ததும் நாம் அறிந்த ஒன்றே.இவ்வாறு முஸ்லிமின் தூய பண்புகளில் இந்தபண்பும் தலையாயது என்பதை விளங்கி அனைவரும் அன்பும் கருணையும் உடையவர்களாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!ஆமீன். link


Aug 28, 2010

ரமழானில் குர்ஆனும் நாமும்

Saturday, 22 August 2009 06:21

அபூ முஆத்

நாம் ஷஹ்ரு ரமழானை அடைந்துள்ளோம். ரமழானை குர்ஆனுடைய மாதமெனக் கூறுவர். இந்த மாதத்தில்தான் முதன் முதல் அல்குர்ஆன் இறங்கியது. இந்த மாதத்தில் நபி (ஸல்) அவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்குர்ஆனை ஓதியும் ஓதிக் காட்டியும் வந்திருக்கிறார்கள். நன்மை கருதி இம்மாதத்தில் முஸ்லிம்கள் அல்குர்ஆனை அதிகமாக ஓதி வருவார்கள். பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகையின்போதும் ஹிஸ்பு மஜ்லிஸ்களிலும் அல்குர்ஆன் ஓதப்பட்டு வருகின்றது.

முஸ்லிம்கள் அல்குர்ஆனை ஐந்து கோணங்களில் அணுக வேண்டியுள்ளது. முதலாவது,அல்குர்ஆன் அல்லாஹ்வினால் அருளப்பட்ட வேதம் என நம்புவதாகும். அது மனித சமுதாயத்துக்கு வழிகாட்டியாக அருளப்பட்ட அல்லாஹ்வின் கலாம் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்தவகையில் அவன் அல்குர்ஆனை கண்ணியப்படுத்துகிறான். அதனை சுத்தமான நிலையில் தொடுகிறான். வுழூவுடன் ஓதுகிறான். அல்குர்ஆனை அல்லது அதன் வாசகங்கள் எழுதப்பட்ட பிரதிகளை கீழே விழாமல் பாதுகாக்கிறான். விழுந்தாலும் உடனடியாக அதனை எடுத்து முத்தமிட்டு கண்ணியமாக மேலே வைக்கிறான்.

உமர் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்கு முன், அவரது தங்கையின் கையிலிருந்த குர்ஆன் ஆயத்துகள் அடங்கிய பிரதியை கேட்டபோது, அதனை அவரிடம் கொடுக்க விரும்பவில்லை. சுத்தம் செய்து வந்த பின்பே அதனைக் கையளித்தார்கள். இது அல்குர்ஆனுக்குக் கொடுத்த கௌரவமாகும்.

இரண்டாவது அல்குர்ஆன் ஓதப்படுவதை செவிமடுப்பதாகும். அல்குர்ஆன் ஓதப்படுமிடங்களில் அமைதிகாத்து அதனைச் செவிமடுக்க வேண்டும். ஓதுபவருக்கு நன்மை கிடைப்பது போலவே கேட்பவருக்கும் நன்மை உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூட அல்குர்ஆனை ஸஹாபாக்கள் ஓதுவதைக் கேட்டு மகிழ்ந்துள்ளார்கள். தாம் கேட்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்களை ஓத வைத்திருக்கிறார்கள். நான் பிறர் அதனை ஓதுவதைக் கேட்பதற்கு விரும்புகிறேன் எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள், இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களை ஓதுமாறு கேட்டு, செவிமடுத்துள்ளார்கள். அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்கள் இரவில் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள் மறைந்திருந்து கேட்டிருக்கிறார்கள். ஸாலிம் மௌலா, அபூ ஹூதைபா (ரழி) அல்குர்ஆன் ஓதுவதை நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா (ரழி) அவர்களுடன் சேர்ந்து கேட்டிருக்கிறார்கள்.

அல்குர்ஆனை ஓதக் கேட்பவருக்கு அது மறுமையில் ஒளியாக அமையுமெனக் கூறி தூண்டியிருக்கிறார்கள். ஆதலால் வழமையை விட இம்மாதத்தில் அல்குர்ஆன் ஓதப்படுவதை அதிகமாகக் கேட்க வேண்டும். தனிநபர்கள் ஓதுவதையோ, மின்னியல் ஊடகங்களூடாக ஓதப்படுவதையோ கேட்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

மூன்றாவது, அல்குஆனை நாம் ஓதிவர வேண்டும். ஓதத் தெரியாதவர்கள் ஓதத் தெரிந்தவர்கள் ஓதுவதை செவியேற்பதோடு திக்கித் திக்கியாவது ஓத முயற்சிக்க வேண்டும். அதற்கும் நன்மை உண்டென நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அல்குர்ஆனை ஓதுங்கள். அது மறுமையில் ஓதியவருக்குப் பரிந்து பேசும்என ஹதீஸ்கள் குறிப்பிடுகின்றன. அல்குர்ஆனை ஓதும்போது அமைதியாக உரிய முறையில் உச்சரித்து ஒழுங்கு முறையில் ஓதி வர வேண்டும். அபூபக்ர் (ரழி) அவர்கள் தமக்கு மட்டும் கேட்குமாறு தாழ்ந்த குரலில் ஓதுவார்கள். உமர் (ரழி) அவர்கள் பிறருக்குக் கேட்குமாறு உரத்த குரலில் ஓதுவார்கள். எனவே, இரு விதமாகவும் ஓதலாம். ஒருவர் அல்குர்ஆனை அவசரமாக ஓதுவதைக் கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள், அவர் குர்ஆனை ஓதவுமில்லை; அமைதியாக இருக்கவுமில்லை என்றார்கள்.

அல்குர்ஆனை ஓதும்போது அது தனக்கு அருளப்பட்டது போன்ற உணர்வுடன் ஓதவேண்டும். அல்குர்ஆனை ஓதும்போது அழுது கண்ணீர் வடியுங்கள்; முடியாது போனால் அழுவதுபோன்று பாவனை செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் வேதனை பற்றிய ஆயத்துக்களை ஓதும்போது பயத்தினாலும் அல்லாஹ்வின் அருள் பற்றிய ஆயத்துக்களை ஓதும்போது ஆனந்தத்தாலும் கண்ணீர் வடிக்கலாம். நபி (ஸல்) அவர்கள் அல்குர்ஆனை ஓதும்போது,கண்கள் கண்ணீர் வடித்ததாகவும் உரோமங்கள் புல்லரித்ததாகவும் அல்லாஹ்வின் பயத்தினால் உள்ளம் நடுங்கியதாகவும் அஸ்மா (ரழி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த உணர்வுடன் அல்குர்ஆனை ஓத நாமும் முயற்சிக்க வேண்டும்.

அல்குர்ஆனை மனனமாக ஓதுவதை விட பார்த்து ஓதுவது சிறப்பானதென இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அல்குர்ஆன் பிரதியை சுமத்தல்,அதனைப் பார்த்தல், அதன் கருத்தை சிந்தித்தல் போன்றவற்றுக்கான வாய்ப்புக்கள் அதன்போது அதிகமாக உள்ளன. சிந்தித்து ஓத வேண்டும் என்பதற்காகத்தான், அவசரமாக ஓதுவதைக் கண்டித்து நபி (ஸல்) அவர்கள், மூன்று நாட்களுக்குக் குறைவான காலப் பிரிவில் குர்ஆனை ஓதி முடிப்பவர் அதனை விளங்கிவில்லை என எச்சரித்தார்கள். அறபு மொழியை விளங்காதவர்கள் மொழிபெயர்ப்பொன்றை உடன் வைத்துக் கொள்வது பயனாக இருக்கும்.

நான்காவது, அல்குர்ஆனை விளங்குவதாகும். அல்குர்ஆன் ஓதுவதற்காக மட்டும் அருளப்பட்ட வேத நூலல்ல. திலாவதுல் குர்ஆனுடன் தப்ஹீமுல் குர்ஆனும் இடம்பெற வேண்டும். எனவேதான், அல்குர்ஆனை பார்த்து ஓதுவது சிலாகித்துக் கூறப்பட்டது. முதலாவது அருளப்பட்ட வசனம் உத்லுமா ஊஹிய இலைக்க (உமக்கு வஹி மூலம் அருளப்பட்டதை ஓதுவீராக)என்று அமையாமல் இக்ரஉ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் (உம்மைப் படைத்த இறைவனின் பெயரால் வாசிப்பீராக)என்று அருளப்பட்டதை சிந்தனையோடு நோக்க வேண்டும். வாசிப்பீராக (இக்ரஉ) என்ற சொற்பிரயோகம் வாசித்து விளங்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

இதனைத்தான் மௌலானா முஹம்மதலி ஜவ்ஹர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். நான் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவன். என்றாலும் அல்குர்ஆனை பொருளுடன் ஓதி உணர்ந்த நாளே நான் உண்மையாகக் கல்வி கற்ற நாளாகும்.ஆகவே அல்குர்ஆனை விளங்கும் மாதமாகவும் இம்மாதத்தை ஆக்கிக் கொள்ள வேண்டும். பல்வேறு மொழிகளிலுள்ள தர்ஜுமாக்களையும் தப்ஸீர்களையும் வாசிக்கலாம். அல்லது கூட்டாக அல்குர்ஆன் விளக்க வகுப்புக்களை நடத்தலாம்.

இவ்வாறு அல்குர்ஆனை விளங்கிய மக்கள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இது ஐந்தாவது பணியாகும். ஸமிஃனா வஅதஃனா கேட்டோம்; வழிப்பட்டோம்என்ற அல்குர்ஆனின் பிரயோகம் இதனைச் சுட்டிக் காட்டுகின்றது. ஒரு நாட்டுப்புற அறபி,அல்குர்ஆனின் சிறிய ஸூறாக்களை கற்றுக் கொண்டபோது, ஸூறா ஸில்ஸாலின் கடைசி ஆயத்தை ஓதக் கேட்டார். பின்னர், அதுவொன்றே தனக்குப் போதும் எனக் கூறி செயல்படுவதாக வாக்குறுதியளித்துச் சென்றார். ஸஹாபாக்கள் அல்குர்ஆனின் பத்து ஆயத்துகளைக் கற்று அதனை செயல்படுத்திய பின்பே அடுத்த ஆயத்துக்களைக் கற்றுக் கொண்டதாக குறிப்புக்கள் காணப்படுகின்றன. இதனால்தான் ஸஹாபா சமூகத்தை அல்குர்ஆனிய சமூகம் என பாராட்டுவர். ஆதலால் நாமும் அல்குர்ஆனைக் கற்று அதனை நடைமுறைப்படுத்துபவர்களாக மாற வேண்டும்.

இவ்வனைத்துப் பணிகளும் ரமழானுடன் சுருங்கி விடுவனவல்ல. முஸ்லிமுடைய வாழ்வு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியன. இதற்கான பயிற்சியை ரமழானில் பெற்றுக் கொள்வோம்.


Aug 25, 2010

4-வது நாள் [நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்].

link

அல்லாஹ் கூறுகிறான்:[நம்பிக்கையாளர்களே!]உங்களில் ஒரு கூட்டத்தார்[மனிதர்களை சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச்செய்யும்படி ஏவி தீமையை விட்டும் தடுத்துக் கொண்டும் இருக்கட்டும்.இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.[3:104].நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும் பணி,ஒரு மகத்தான சேவையாகும்.அந்த பணி விடு பட்டதே இன்றைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் என்று கூட சொல்லலாம்.ஒரு முறை நபி[ஸல்]அவர்கள் உம்முல் முஃமினீன்[விசுவாசிகளின் தாய்]ஜைனப் பிந்த் ஜஹ்ஷ்[ரழி]அவர்களின் வீட்டுக்கு வருகிறார்கள்,அன்னாரின் முகத்தில் பதட்டமும் கவலையும் தெரிகிறது.அப்போது நபியவர்கள்"நெருங்கி வரும் தீமையினால் அரபுகளுக்கு அழிவுதான் யஃஜூஜ் மஃஜூஜ்களின் தடையிலிருந்து இந்த அளவு திறந்து விட்டது" என்று கூறியவர்களாக தங்களின் பெரு விரல் மற்றும் கலிமா விரலின் நுனிகளை இணைது வட்டமாக காட்டினார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அன்னை ஜைனப்[ரழி]அவர்கள் "யா ரஸூலல்லாஹ்!எங்களில் நல்லோர்கள் இருக்கும் நிலையிலும் எங்களுக்கு அழிவு வருமா?" என்று வினவ,நபி[ஸல்]அவர்கள் அருளினார்கள்:ஆம் தீமைகள் மிகைத்து விடும்போது.[நூல்:புகாரி, முஸ்லிம்].தீமைகள் மிகைத்தல்,என்பதற்கு தனியாக விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இன்றைக்கு கிடையாது காரணம், அந்த அளவு எங்கு நோக்கினும் பாவங்கள் நன்மைகளை மிகைத்து தலைவிரித்து ஆடிக்கொண்டிருப்பதை நன்கறிவோம், இந்த நிலையில் நமது கடமைகள் என்ன வென்பதை ஒவ்வருவரும் விளங்க வேண்டும்.தீமைகளின் மிகைப்பினால் ஏற்படும் இறைத்தண்டனைகள் அந்த தீமைகளைச்செய்தவர்கலை மட்டும் பாதிப்பதில்லை,மாறாக[நல்லோருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும்]என்பதை போல,அனைவரையுமே சேர்த்து பிடிக்கும்,[அல்லாஹ் காப்பானாக!]ஒரு முறை அபூ பக்கர்[ரழி]அவர்கள் கூறினார்கள்: மனிதர்களே!நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனமாகிய'விசுவாசிகளே!நீங்கள் [தவறான வழியில் செல்லாது]உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!.நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய யாருடைய தீங்கும் உங்களை பாதிக்காது.[5:105].என்ற வசனத்தை ஓதுகிறீர்கள்,நபி[ஸல்] அவர்கள் கூற்யதை நிச்சயமாக நான் கேட்டுள்ளேன்,அன்னார் கூறினார்கள்"திட்டமாக மனிதர்கள் அனியாயம் செய்பவனை கண்டும் அவனை[க் கண்டு கொள்ளாமல்] அதனை விட்டும் தடுக்காமல் இருந்துவிட்டால்,அல்லாஹ் தனது வேதனையை[அதை செய்தவர்கள் செய்யாதவர்கள்]அனைவரின் மீதும் பொதுவாக இறக்கி விடுவான்.[நூல்:அபூ தாவூத்,திர்மிதீ].மற்றொரு முறை நபி[ஸல்]அவர்கள் இதற்கு ஒரு உதாரணம் கூறி விளக்கினார்கள்:அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கும்,அவற்றை பேணாமல் வாழுகிறவர்களுக்கும் உதாரணமாகிறது,ஒரு கப்பலில் இரு பிறிவினர் பயணம் செய்தனர்,அவர்களில் ஒரு பிறிவினர் மேல் தளத்திலும் மறு பிறிவினர் கீழ் தளத்திலுமாக பயணித்தனர். அத்தியாவசியமான தேவைக்குரிய தண்ணீர் மேல் தளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்ததால் கீழ் தளத்தில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு முறையும் மேலே சென்று வருவது சிரமமாக இருந்தது.எனவே தண்ணீர் தேவைப் பட்டால் நமக்கு கீழே தண்ணீர் இவ்வளவு இருக்க நாம் ஏன் மேலே சென்று கஷ்டப் படவேண்டும்,கீழே ஒரு ஓட்டைப்போட்டு தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்,என்றுமுடிவெடுத்தனர்.இந்த ஆபத்தான முடிவக்கண்டு அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் தடுத்தால் அனைவரும் தப்பித்துக் கொள்ளலாம்,அவ்வாறு தடுக்காமல் கீழே ஓட்டைப் போட்டால் நமக்கென்ன என்று இருப்பார்களானால் தண்ணீர் உள்ளே புகுந்து அனைவரும் அழிந்து போவது உறுதி.[இவ்வாறே தீமையைக் கண்டும் தடுக்கவில்லையெனில் அதனால் ஏற்படும் தண்டனை அனைவரையும் அழித்து விடும்].[நூல்:புகாரி].இதையே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:நீங்கள் வேதனையை பயந்து கொள்ளுங்கள்!அது அனியாயக்காரர்களை மட்டும் பிடிக்கும் என்பதல்ல,' [முடிவில் அது உங்களையும் சூழ்ந்துகொள்லலாம்]நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.[8:25]

Aug 23, 2010

3-வது நாள்[கடன்

அல்லாஹ் கூறுகிறான்: அன்றி (கடன் வாங்கியவன் அதனைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்)அவன் கஷ்டத்திலிருந்தால்(அவனுக்கு)வசதி ஏற்படும் வரையில் எதிர்பார்த்திருங்கள்! மேலும் (இதிலுள்ள நன்மைகளை)நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்(அதை அவனுக்கே)தானம் செய்து விடுவது(பிறருக்கு தானம் செய்வதை விட)உங்களுக்கு நன்மையாகும்.(2:280).கடனைப்பற்றி நமது மார்க்கம் நல்ல பல கருத்துக்களை கூறியுள்ளன,அவற்றில் கடன் பெற்றவர் நடந்து கொள்ள வேண்டிய முறைகளும்,கடன் கொடுத்தவர் கடனாளியிடத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளும் அடங்கும். கடன் கொடுத்தவர். கடன் கொடுத்தவர் நடந்து கொள்ளவேண்டிய நளினமான முறைகளையே மேற்சொன்ன வசனம் போதிக்கிறது.நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:அல்லாஹ்வுடைய நிழலைத்தவிர மற்ற எந்த நிழலும் இல்லாத அந்த(கியாமத்)நாளில்,அந்த நிழலில் தனக்கும் இடம் கிடைக்கவேண்டும் என்று யாராவது விரும்பினால்,அவர்தன்னிடத்தில் கடன் பெற்று கஷ்டப்படுகின்ற மனிதரிடத்தில் மென்மையோடு நடந்து கொள்ளட்டும்! அல்லது அந்த கடனை மன்னித்து விட்டு விடட்டும்!.(நூல்:தப்ரானி)..மற்றொரு ஹதீஸில்,எவர் தன்னிடம் கடன் பெற்றவருக்கு தவணையை நீட்டித்து சலுகைச்செய்தாரோ அவர் நீட்டித்துக் கொடுத்த ஒவ்வொரு நாளும் கடன் தொகையின் அளவுக்கு தர்மம் செய்த நன்மையை அல்லாஹ் எழுதுகிறான்(நூல்:அஹ்மத்) என்று வந்துள்ளது. மற்றொரு ஹதீஸில்,நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்:எவர் தனது துஆ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும்,தனது துன்பங்கள் தீர்க்கப்படவேண்டும் என்றும் விரும்புவாரோ அவர் கஷ்டப்படக்கூடியதனதுகடனாளிக்குதவணைக்கொடுக்கட்டும்.(நூல்:அஹ்மத்). அபூகதாதா(ரழி)அவர்களிடம் ஒருவர் கடன் வாங்கியிருந்தார்.கடனைத் திருப்பிக் கேட்பதற்காக அவரிடம் அபூகதாதா(ரழி)அவர்கள் வரும்போதெல்லாம் அந்த மனிதர் வீட்டுக்குள் சென்று ஒழிந்துக் கொள்வார். ஒருமுறை அந்த நபரின் வீட்டுக்கு அன்னார் வந்த போது எதார்த்தமாக அந்த வீட்டுக்குள்ளிருந்து ஒரு சிறுவன் வெளியே வந்தான், அவனை நோக்கி அபூகதாதா(ரழி)அவர்கள்;உனது தந்தை எங்கே?என்று வினவ,அவன் தனது தந்தை வீட்டுக்குள் இருப்பதாகச்சொல்லிவிட்டான்.உடனே அந்த வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு"நண்பரே!வெளியில் வாரும்!நீர் உள்ளே பதுங்கி இருப்பது எனக்குத்தெரிந்து விட்டது".என்று குரல் கொடுக்க அம்மனிதரும் வெளியே வந்தார். என்னைக்கண்டு ஒழிந்துக்கொள்ள காரணமென்ன?,என்று அபூகதாதா(ரழி)அவர்கள் கேட்டார்கள்.அதற்கு அம்மனிதர்,நான் கஷ்டப்படுபவன், தங்களுக்கு முன்னால் வந்து அந்த தங்கடத்தைப்பற்றி கூற எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால்தான் தங்களுக்கு முன்னால் வருவதற்கு வெட்க்கப்பட்டு ஒழிந்துக் கொண்டேன்,என்று கூறினார்.இதனைக்கேட்ட அபூகதாதா(ரழி)அவர்கள் உண்மையாகவா நீ கஷ்டப்படுகிறாய்?எனக்கேட்டார்கள்.அம்மனிதரும் ஆம் என்று உறுதியாகக்கூறினார்.உடனே அன்னார் அழுது விட்டார்கள்.காரணம் கேட்டபோது அன்னார் கூறினார்கள்;நபி(ஸல்)அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்"எவர் கடனாளிக்கு அவகாசம் கொடுத்து உதவினாரோ,அல்லது கடனை மன்னித்து விட்டு விடுகிறாரோ அவர் மறுமை நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்.(நூல்:புகாரி) கடனை திரும்ப நிறைவேற்றுவது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களிடம் ஒருவர் கேட்டார்: "அல்லாஹ்வின் தூதர் அவர்களே!நான் இறைவனின் பாதையில் போரிட்டு அதில் கொல்லப்பட்டால் எனது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுமா?"அதற்கு பதில் கூறிய நபி(ஸல்)அவர்கள்"ஆம்,ஆனால் நீங்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்,நன்றியுடையவராக இருந்திருக்க் வேண்டும்,எதிரியைத் தாக்குவதில் முன்னணியில் நின்று போரிட்டிருக்க வேண்டும்,பின் வாங்கியிருக்கக் கூடாது,அல்லாஹ்வின் திருப்தி ஒன்றையே நாடுபவராக இருந்திருக்க வேண்டும்,போரில் கொல்லப் பட்டிருக்க வேண்டும்"எனக்கூறினார்கள். பின்னர் சிறிது நேரத்திற்குப் பின்,கேள்விக் கேட்ட அந்த மனிதரிடம்"நீங்கள் என்ன சொன்னீர்கள்?"என்று வினவினார்கள்.அவர் மீண்டும் அதே கேள்வியையே திரும்பக் கேட்டார்.மீண்டும் நபி(ஸல்)அவர்கள் அந்த மனிதரிடம்"நீங்கள் என்ன சொன்னீர்கள்?" எனக் கேட்டார்கள். அவரும் அதே கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போது நபி (ஸல்)அவர்கள் "உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்,ஆனால் உங்களுடைய கடன் கள் மன்னிக்கப் படமாட்டாது,இந்த செய்தியை ஜிப்ரீல்(அலை)அவர்கள் இப்போதுதான் வ்ந்து சொல்லிச்சென்றார்கள்.என்று அருளினார்கள்.(நூல்:முஸ்லிம்).நபி(ஸல்)அவ்ர்கள் பொர் புரிய புறப்படும் போதெல்லாம் ஒரு அற்விப்புச்செய்வார்கள்,"அல்லாஹ்வின் அணியினரே! உங்களில் யாராவது வங்கியக் கடனைதிருப்பித் தர வேண்டியதிருந்தால், போரில் இறந்து போவோம்,கடன் திருப்பித் தரப்படாமலே போய் விடும் என்ற அச்சமும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் திரும்பிப் போய் விடுங்கள்!அவர் போருக்கு என்னோடு வர வேண்டாம்.ஏனெனில் ஒருவன் நரகிலிருந்து விடுதலைப் பெறுவதற்கு இந்த ஜிஹாத் மட்டும் போதாது,(கடனைத் திரும்ப நிறைவேற்றுவதும் அவசியமாகும்(நூல்:ரஸீன்)

Aug 18, 2010

link

2-வது நாள்[இறையச்சம்] அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே!உங்களுக்கு முன்னிருந்தவர்களின் மீது கடமையாக்கப்பட்டிருந்ததைப் போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.[அதனால்] நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்.(2:183)

அன்பானவர்களே! மனிதனின் வாழ்வு பல சூழ் நிலைகளால் சூழப்பட்டுள்ளது. தவறுகளை விட்டும் தவிர்ந்து கொள்வது என்பது மிகவும் சிரமான ஒன்றாகவே உள்ளது, இதற்கெல்லாம் காரணம்;இந்த உலகத்தை அல்லாஹ் ஒரு சோதனையாக படைத்துள்ளான், அந்த சோதனைகளை சிலவற்றின்மூலம் அவன் உண்டாக்கியுள்ளான்.

மனமயக்கத்திற்கு காரணம் நான்கு பேர். ஆம்! நாம் அல்லாஹ்வை பயந்து வாழ வேண்டும் என்று என்னதான் முயன்றாலும், சில சந்தர்ப்பங்கள் நம்மையும் மிகைத்து நிலைத்தடுமாறச்செய்து விடுகின்றன. அந்த சந்தர்ப்பங்களின் கார்ணகர்த்தாக்கள் நான்குபேர் எனலாம். 1) உலக ஆசைகள், 2)குடும்ப பாசங்கள், 3) ஷைத்தான்[என்ற நமது விரோதி], 4)நமது உள்ளம்[மனோ இச்சை], இவற்றில் நமக்கு மிகவும் ஆபத்தானது நமது உள்ளம்தான்,காரணம்; இன் நான்கில் நமது உள்ளத்தைத்தவிர மற்ற மூன்றும் நம்மைவிட்டும் தனியாக உள்ளன,ஆனால் நமது உள்ளம் மட்டுமே நம்கூடவே இருந்து குழி பறிக்கின்றது. எனவேதான் யூஸுஃப்[அலை] அவர்களின் வார்த்தைகளை அல்லாஹ் தனது அருள்மறை குர் ஆனில் இவ்வாறு கூறுகிறான்:அன்றி "நான்(தவறுகளிலிருந்து)பரிசுத்தமானவன்"என்று என்னைப்பற்றி நான் கூறவில்லை,ஏனென்றால் நிச்சயமாக என் இறைவன் அருள் புரிந்தாலன்றி(மனிதனின்)மனம் பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது.(12:53).. நம்மைவிட்டும் நீக்கப்பட முடியாத நம் இதயத்தின் தீங்கை விட்டும் தப்பிக்கவேண்டுமென்றால்;அந்த இச்சையை நம் சொல்லைக் கேட்கும் வகையில் பயிற்சி செய்து பழக்கப்படுத்தவேண்டும். அந்த பயிற்சியின் பலன் தான்"தக்வா"இறையச்சமாகும். இந்த இறையச்சம் என்ற கேடயத்தின் மூலம் மனோ இச்சையின் தீங்குகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொண்டால் மறுமையில் இன்பமே இன்பம்தான்.இதையே அல்லாஹ் ,எவர் தன் இறைவனின் சன்னிதியில்(விசாரணைக்காக)நிற்பதைப்(பற்றி)பயந்து (தனது தவறான)மனோ இச்சையை விட்டும் தன்னை தடுத்துக்கொண்டாரோ,அவர் செல்லுமிடம் சுவனம்தான்.(79:40,41)

இறையருள் இன்றி முடியாது.

தோழர்களே! இந்த இறையச்சம் என்ற பாதுகாப்பு அரண் நம் பயிற்சிகளாலும் முயற்சிகளாலும் மட்டும் முடியக்கூடிய ஒன்றல்ல;இவற்றுக்கும் மேலாக இறையருள் தேவை,நாம் செய்யும் முயற்சிக்கும் அந்த இறையருள் அவசியம். எனவே இந்த "தக்வா"இறையச்சத்தை அல்லாஹ்விடம் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அன்னை ஆயிஷா(ரழி)அவர்கள் அறிவிக்கிறார்கள்:ஒரு முறை நபியவர்களை எனது வீட்டில் தேடினேன்,காண முடியவில்லை,கதவைத்திறந்து பள்ளிவாசலில் பார்த்தேன்,அங்கு அன்னார் பூமியில் தலைவைத்து "ஸஜ்தா" செய்த நிலையில் "அல்லாஹும்ம ஆத்தி நஃப்ஸீ தக்வாஹா,வஜக்கிஹா அந்த ஃகைரு மன் ஜக்காஹா,அந்த வலிய்யுஹா வமவ்லாஹா".(அல்லாஹ்வே!எனது உள்ளத்திற்கு (உனது)பயபக்தியைத் தருவயாக!,அதனை பரிசுத்தப் படுத்துவாயாக!,நீதான் அதன் உதவியாளனும்,மற்றும் தலைவனுமாவாய்!என்று துஆ(பிரார்த்தனைச்செய்து கொண்டிருந்தார்கள்.அத்தகைய பயபக்தியை,அல்லாஹ் நமக்கும் தந்தருள்புரிவானாக!ஆமீன்

Aug 17, 2010

மகிழ்ச்சியின்மாதம்

நம்மிடம் வருகைத் தந்துள்ள இம்மாதம்,மகிழ்ச்சியின் மாதம் மட்டுமல்ல; இது பயிற்சியின் மாதமும்கூட. ஆம்!இம்மாதம் வருகைத் தந்தவுடன் பலபேர், தொழுகையாளியாக,குர்'ஆன் ஓதக்கூடியவர்களாக, தர்மம் செய்யக்கூடியவர்களாக, நன்மைகளில் நாட்டமுடையவர்களாக ,மாறிவிடுவதைக்காணுகிறோம்.

இந்த மாற்றங்களை அல்லாஹ்,இந்த மாதத்துக்குரிய பிரயோஜனமாக ஆக்கியுள்ளான். குறிப்பாக இந்த மாதத்தில் பல மஸ்ஜிதுகளில் தராவீஹ் தொழுகைக்கான ஏற்பாட்டில்,குர்'ஆன் முழுவதையும் ஓதி தொழுக வைப்பதோடு,அவற்றிற்கான விளக்கங்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்புகளையும் உண்டாக்கியுள்ளார்கள்;என்பது மிகவும் மகிழ்ச்சியான்ஒன்றாகும்[அல்ஹம்து லில்லாஹ்].

தினம் ஒரு திருவசனம். அடியேன் பணி செய்யும் "சிங்கை பென் கூலன்" பள்ளிவாசலில் தினமும் தராவீஹ் இருபது ரக்க அத்துகள் தொழுக வைத்து ,அதில் தினமும் ஒரு[பாகம்], ஜுஸ்வு என்ற விகிதப்படி,முப்பது நாட்களுக்கு முப்பது ஜுஸ்வுகள்,முடிக்கப்படுகின்றன, அத்துடன்,அன்றைக்கு ஓதப்பட்டவைகளில் ஒருவசனத்தை எடுத்து அதன் விளக்கத்தையும் சொல்லுகின்ற பாக்கியத்தை எனக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான்,[எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே].

அவ்வாறு கூறப்பட்ட விளக்கங்களை இந்த தளத்திலும் பதிவு செய்து தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் 1-வது நாள்[ஈமான்,விசுவாசம்]

அல்லாஹ் கூறுகிறான்: அலிஃப் லாம் மீம்,இதுதான் வேத நூல்,இதில் சந்தேகமில்லை,இறையச்சம் உடையவர்களுக்கு[இது]நேரான வழியைக் காட்டும்,அவர்கள் மறைவானவற்றை[உண்டென்று]நம்பிக்கை கொள்வார்கள்,தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள்,நாம் அவர்களுக்கு வழங்கியுள்ள[பொருள் செல்வம் போன்ற]வற்றிலிருந்து [தானமாக]செலவும் செய்வார்கள்.[அன்றி நபியே!]உங்களுக்கு இறக்கப்பட்ட இ[வ்வேதத்]தையும்,உங்களுக்கு முன்[பிருந்த நபிமார்களுக்கு]இறக்கப்பட்ட[வேதங்கள் யா]வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள்,[நியாயத் தீர்ப்பு நாளாகிய]இறுதி நாளையும் [உண்மை என்று]உறுதியாக நம்புவார்கள்.இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரன வழியில் இருக்கிறார்கள், இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள்.{2:1,2,3,4,5.} ஒரு முறை நபி[ஸல்]அவர்களிடம் ஜிப்ரீல்[அலை]அவர்கள் வருகைத்தந்த போது,அன்னாரிடத்தில் நபியவர்கள்,பல கேள்விகளைக் கேட்டார்கள்,அவற்றில் ஒன்று;ஈமான்[விசுவாசம் கொள்ளுதல்]என்றால் என்ன?"என்பதாகும். அதற்கு ஜிப்ரீல்[அலை]அவர்கள் பதில் கூறினார்கள்:ஈமான் என்பது,அல்லாஹ்வையும்,அவனுடைய மலக்கு[வானவர்]களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும்,மறுமை நாளையும்,நன்மைத்தீமை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நடைபெறும் என்பதையும்,மனப்பூர்வமாக நம்பி விசுவாசம் கொள்வதாகும். ஒரு முஸ்லிமின் உள்ளத்துக்குள் ஆணி வேர்களாக இருக்க் வேண்டிய அடிப்படை கொள்கைகள் இவை. இந்த நம்பிக்கைகளில் ஒன்றில் சந்தேகம் என்றாலும்,அவனை விசுவாசி[முஃமின்]என்று கூறுவது முடியாததாகும். இந்த நம்பிக்கைகளுடன் நற்செயல்களும் இணைந்திருப்பதும் அவசியமாகும்,அவை;1)வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,முஹம்மத்[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவர்கள்,என்று நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதி கொள்வதாகும்,2)தினமும் ஐந்து நேரம் தொழுவது,3)ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது,4)தனது பொருள்களைக் கணக்கிட்டு ஜகாத்[ஏழை வரி]கொடுப்பது,5)வசதியுடையவர்கள் ஹஜ் என்ற கடமையை நிறை வேற்றுவது. இவை யாவும் உண்மை விசுவாசியின் இலக்கணமாகும்.இந்த நம்பிக்கையும் விசுவாசமும், சில தன்மைகளை விசுவாசியின் இதயத்தினுள் பதிய வைக்க வேண்டும்,அதுதான் அவனது பூரண நம்பிக்கையின் வெளிப்பாடாகும். எல்லாம் அவனுக்காக, நபி[ஸல்]அவர்கள் அருளினார்கள்:"ஒருவர் கொள்கின்ற விருப்பும்,வெறுப்பும்,அவர் அடுத்தவருக்கு கொடுப்பதும், கொடுக்காமல் தவிர்த்துக் கொள்வதும்,[ஆக அனைத்தும்]அல்லாஹ்வுக்காக என்று ஆகி விட்டால்,அவரது ஈமான் பூரணத்துவம் பெற்றுவிட்டது,"[நூல்:முஸ்லிம்]ஈமானின் இனிமை. மூன்று தன்மைகள் யாரிடத்தில் இருக்குமோ, அவர் ஈமானின் சுவையை அடைந்து கொள்வார்;1)மற்ற அனைத்து பொருட்களை விடவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் அந்த மனிதருக்கு பிரியமானவர்களாக ஆகி விடுவது. 2)யாரை அவர் விரும்பினாலும் அல்லாஹ்வுக்காக விரும்புவது.3)நெறுப்பில் நுழைவது எவ்வளவு வெறுப்பாக இருக்குமோ அந்தளவுக்கு குஃப்ரின்[இறை மறுப்பின்]பக்கம் மீழுவதை அவன் வெறுப்பது.[நூல் :புகாரி] நபி[ஸல்]அவர்கள் ஒரு துஆ வை அடிக்கடி கேட்பார்கள்:யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானைப் பிரியமானதாக ஆக்கி வை;. அதை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக்கி வை,உன்னை மறுப்பதையும்,பாவங்கள் புரிவதையும்,உனக்கு மாறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பானதாக்கி வை,[நூல்:அஹ்மத்

ஈமான்

ஒரு முறை நபி[ஸல்]அவர்களிடம் ஜிப்ரீல்[அலை]அவர்கள் வருகைத்தந்த போது,அன்னாரிடத்தில் நபியவர்கள்,பல கேள்விகளைக் கேட்டார்கள்,அவற்றில் ஒன்று;ஈமான்[விசுவாசம் கொள்ளுதல்]என்றால் என்ன?"என்பதாகும். அதற்கு ஜிப்ரீல்[அலை]அவர்கள் பதில் கூறினார்கள்:ஈமான் என்பது,அல்லாஹ்வையும்,அவனுடைய மலக்கு[வானவர்]களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும்,மறுமை நாளையும்,நன்மைத்தீமை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நடைபெறும் என்பதையும்,மனப்பூர்வமாக நம்பி விசுவாசம் கொள்வதாகும். ஒரு முஸ்லிமின் உள்ளத்துக்குள் ஆணி வேர்களாக இருக்க் வேண்டிய அடிப்படை கொள்கைகள் இவை. இந்த நம்பிக்கைகளில் ஒன்றில் சந்தேகம் என்றாலும்,அவனை விசுவாசி[முஃமின்]என்று கூறுவது முடியாததாகும். இந்த நம்பிக்கைகளுடன் நற்செயல்களும் இணைந்திருப்பதும் அவசியமாகும்,அவை;1)வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,முஹம்மத்[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவர்கள்,என்று நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதி கொள்வதாகும்,2)தினமும் ஐந்து நேரம் தொழுவது,3)ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது,4)தனது பொருள்களைக் கணக்கிட்டு ஜகாத்[ஏழை வரி]கொடுப்பது,5)வசதியுடையவர்கள் ஹஜ் என்ற கடமையை நிறை வேற்றுவது. இவை யாவும் உண்மை விசுவாசியின் இலக்கணமாகும்.இந்த நம்பிக்கையும் விசுவாசமும், சில தன்மைகளை விசுவாசியின் இதயத்தினுள் பதிய வைக்க வேண்டும்,அதுதான் அவனது பூரண நம்பிக்கையின் வெளிப்பாடாகும். எல்லாம் அவனுக்காக, நபி[ஸல்]அவர்கள் அருளினார்கள்:"ஒருவர் கொள்கின்ற விருப்பும்,வெறுப்பும்,அவர் அடுத்தவருக்கு கொடுப்பதும், கொடுக்காமல் தவிர்த்துக் கொள்வதும்,[ஆக அனைத்தும்]அல்லாஹ்வுக்காக என்று ஆகி விட்டால்,அவரது ஈமான் பூரணத்துவம் பெற்றுவிட்டது,"[நூல்:முஸ்லிம்ஈமானின் இனிமை. மூன்று தன்மைகள் யாரிடத்தில் இருக்குமோ, அவர் ஈமானின் சுவையை அடைந்து கொள்வார்;1)மற்ற அனைத்து பொருட்களை விடவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் அந்த மனிதருக்கு பிரியமானவர்களாக ஆகி விடுவது. 2)யாரை அவர் விரும்பினாலும் அல்லாஹ்வுக்காக விரும்புவது.3)நெறுப்பில் நுழைவது எவ்வளவு வெறுப்பாக இருக்குமோ அந்தளவுக்கு குஃப்ரின்[இறை மறுப்பின்]பக்கம் மீழுவதை அவன் வெறுப்பது.[நூல் :புகாரி] நபி[ஸல்]அவர்கள் ஒரு துஆ வை அடிக்கடி கேட்பார்கள்:யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானைப் பிரியமானதாக ஆக்கி வை;. அதை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக்கி வை,உன்னை மறுப்பதையும்,பாவங்கள் புரிவதையும்,உனக்கு மாறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பானதாக்கி வை,[நூல்:அஹ்மத்

ஈமானின் இனிமை

மூன்று தன்மைகள் யாரிடத்தில் இருக்குமோ, அவர் ஈமானின் சுவையை அடைந்து கொள்வார்; 1)மற்ற அனைத்து பொருட்களை விடவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் அந்த மனிதருக்கு பிரியமானவர்களாக ஆகி விடுவது. 2)யாரை அவர் விரும்பினாலும் அல்லாஹ்வுக்காக விரும்புவது. 3)நெறுப்பில் நுழைவது எவ்வளவு வெறுப்பாக இருக்குமோ அந்தளவுக்கு குஃப்ரின்[இறை மறுப்பின்]பக்கம் மீழுவதை அவன் வெறுப்பது.[நூல் :புகாரி]

நபி[ஸல்]அவர்கள் ஒரு துஆ வை அடிக்கடி கேட்பார்கள்: யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானைப் பிரியமானதாக ஆக்கி வை;. அதை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக்கி வை,உன்னை மறுப்பதையும்,பாவங்கள் புரிவதையும்,உனக்கு மாறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பானதாக்கி வை,[நூல்:அஹ்மத்


Aug 6, 2010

ரமளானே!வருக!!

மனிதனைப் படைத்த அல்லாஹ்,அவனது தேவையறிந்து பல படைப்புகளைப் படைத்திருப்பதை போல, அவனைத் திருத்தமுள்ள மனிதனாக வாழ்ந்து ஆன்மீக வாழ்விலும் வெற்றி பெற்றிட பல ஏற்பாடுகளை செய்திருக்கின்றான். தனது தூதர்களை அனுப்பியும், தனது வேதங்களை இறக்கியும், பல அற்புதங்களைக்காட்டியும், பல சோதனைகளின் மூலமும், இப்படி பல வகையான காரியங்களால், மனிதனை நேர் வழிக்கு கொண்டு வர கருணையுள்ள அல்லாஹ் வழிகளை உண்டாக்கியுள்ளான். இவ்வாறே, புனித நாட்கள் பலவற்றின் மூலமும், தனது நினைவுகளை அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் பசுமையாக பதிய வைக்க முயற்சிக்கிறான். நம்மை எதிர் நோக்கி வரும் ரமளான் மாதமும் மனித உள்ளங்களில் நற்பண்புகளை விதைப்பதாகவே அமைந்துள்ளது. பொறுமை. நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள்,ரமளான் மாதம் துவங்குவதற்கு முன் ஒரு உபதேசம் செய்தார்கள், அந்த ஹதீஸின் தொடரில், இந்த மாதம் பொறுமையின் மாதம், பொறுமையின் கூலி சொர்க்கமாகும்.,என்று கூறினார்கள். இந்த வார்த்தை ,புனித ரமளான் மாதம் பொறுமையை போதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. பொதுவாக பசியென்பது கோபத்தை அதிகப்படுத்தும், அதே வேளை இந்த போதனை, முஃமினுக்கு அளிக்கப்படும் சிறந்த பயிற்சி எனலாம்.காரணம்;இன்றைக்கு ஏற்படும் ஏகப்பட்ட பிரச்சனைகளுக்கு பொறுமையின்மையே முக்கியமான காரணமாகக்கொள்ளலாம். சமாதான உலகை உருவாக்கும் இலட்சியம் கொண்ட இனிய மார்க்கமாகிய இஸ்லாம், அருள்மறை குர்'ஆன் "பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி கணக்கின்றி வழங்கப்படும்,"[39:10] என்று கூறுகிறது

Aug 1, 2010

கருணை உள்ளங்கள்

மனிதனாய் பிறந்தால் மட்டும் போதாது, மனித தன்மைகளோடு வாழ்ந்தோமா? என்பதுதான் வ்முக்கியம்காரணம் இதையே அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர் பார்க்கின்றான். அல்லாஹ்,தனது தூதர் நபி[ஸல்] அவர்களின் அழகிய அழைப்புப் பணியின் வெற்றிக் குறித்து கூறுகின்றான்"நபியே! அல்லாஹ்வின் அருளின் காரணமகவே நீங்கள் அவர்களிடத்தில் மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் உடையவராகவும் நடந்து கொண்டிருப்பீரானால்,உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்". நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் அருளினார்கள்:"பூமியிலுள்ளவர்களின் மீது நீங்கள் கருணையோடு நடந்து கொள்ளுங்கள்!, வானிலுள்ள[அல்லாஹ்வான]வன் உங்களின் மீது கருணை புரிவான்