Feb 15, 2012

சங்கை நபியை சத்தியப்படுத்தும் சான்றுகள்.

அற்புதம் ஆனால் உண்மை.
இன்று முதல் இன்ஷா அல்லாஹ் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் [ஸல்]அவர்களின் வாழ்க்கையில் நடை பெற்ற முஃஜி ஸா என்னும் அற்புதங்களை தினமும் கூற இருக்கிறோம்,நண்பர்கள் நாம் பதிவு செய்யும் இவற்றில் எதாவது தவறுகள் இருந்தால் தாராளமாக தட்டிக்கேட்க்கலாம்,மாறாக இதற்கு சம்மந்தமில்லாத விஷயங்களை புகுத்தி தானும் குழம்பி பிறரையும் குழப்ப வேண்டாம்! என்பதை மிகவும் தயவோடு கேட்டுக்கொள்கிறோம்,
முஃஜிஸா] அற்புதம் என்றால் என்ன?மனித அறிவுக்கு அப்பாற்பட்டு அவனால் முடியாத ஒன்றை அல்லாஹுத்தஆலா தனது தூதர்களின் மூலம் உலக மக்களுக்கு காட்டி தனது ஆற்றலுக்கு அடையாளமாக வலுப்படுத்தும் அதிசயங்களுக்கு சொல்லப்படும்.
இத்தகைய அதிசயங்களை அநேக இறைத்தூதர்களும் இவ்வுலகில் காட்டியுள்ளனர்,அவ்வாறே நமது நபி முஹம்மது [ஸல்]அவர்களும் அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர்,அவற்றைத்தான் ஆதாரப்பூர்வமாக இங்கு காணப்போகிறோம்.

நபி[ஸல்]அவர்கள் இவ்வுலகில் காட்டிய அற்புதங்கள் 1000,என்றும் சிலர் 3000 என்றும் கூறுகின்றனர்[அல்லாஹ்வே மிக அறிந்தவன்]

இதன் நோக்கம் []நபியின் வாழ்வில் நிகழ்ந்தவைகளில் எல்லாமே படிப்பினைக்குரியவையாக இருந்தும் கூட இவ்வாறான செய்திகளை கூறுவது அருகிவிட்டன காரணம் [தெளிவானது]தேவை இல்லை,[]நபியின் தனித்தன்மைகளை இதன் மூலம் உணர்ந்து நபியின் மீது அதிகமான கண்ணியமும் அன்பும் கொள்வதுதான்.

அல்லாஹ் நமது நல்ல நோக்கங்களை நிறைவேற்றி அருள் புரிவானாக!ஆமீன்.





**குர்ஆன் ஒரு நிரந்தர அற்புதம்**
---------------------------------------------
நபி [ஸல்]அவர்கள் காட்டிய அற்புதங்களிலேயே பெரும் அற்புதம் குர்ஆன்தான்.காரணம் [1]அன்று இருந்த மொழி நயம் மிகுந்த அரப்களுக்கே சவால் விட்டு இதைப்போன்ற பத்து சூராக்களை,அல்லது ஒரு சூராவை ,அல்லது ஒரு வசனத்தையாவது கொண்டு வாருங்கள்!பார்க்கலாம்.என்று சவால் விட்ட குர்ஆனுக்கு இதுவரை யாரும் பதில் தர முடியவில்லை.

[2]இது வரை இந்த வேதத்திலிருந்து ஒரு புள்ளி கூட மாற்ற முடியாத அளவுக்கு நிரந்தர பாதுகாப்ப்பு.

[3]அன்றைக்கு இருந்த நிகழ் காலம் பற்றி பேசியதை போல வருங்காலம் பற்றியும் தெளிவாக பேசிய அற்புதம்.
[4]இன்று புதிதாக கண்டு பிடிக்கப்படும் அறிவியல்களுக்கும் இது முன்னோடியாக இருப்பது.

[5]எல்லாவற்றுக்கும் மேலாக மனித வாழ்க்கைக்கு பின்னுள்ள மறு உலக வாழ்க்கைப் பற்றி தெளிவாக பேசுவது.
இன்னும் எத்தனையோ தனிச்சிறப்புகள் அதன் அற்புதத் தன்மைக்கு அடையாளங்களாக உள்ளன.

படிப்பினை:இறை மறை குர்ஆனுக்கு எவ்வளவு அந்தஸ்து உள்ளதோ அவ்வாறே அதை பின்பற்றினாலும் அல்லாஹ் பெரிய அந்தஸ்தை தருவான்.குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வேதம் அதை பின்பற்றுபவர்களையும் அது பாதுகாக்கும் இதை உணராததால்தான் இன்றைய பிரச்சினைகளே