Dec 5, 2018

தேவையற்றவைகளை தவிர்த்தல்

ஹஜ்ரத் இம்ரானிப்னுஹத்தான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
நான் ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களைக் கறுப்பு நிறக் கம்பளியைத் தம் மீது
போர்த்தியவர்களாகத் தன்னந்தனியாக பள்ளியில் உட்கார்ந்திருக்கக் கண்டேன்.
அபூதர்! இப்படி தனியே அமர்ந்திருப்பதேன்?'' என்று நான் வினவினேன்,
கெட்ட நண்பனுடன் அமர்ந்திருப்பதைவிட தனிமை மேலானது, நல்ல
நண்பனுடன் அமர்வது தனிமையைவிட மேலானது, யாருக்கேனும் நல்ல
சொற்களைச் சொல்வது மௌனத்தைவிடச் சிறந்தது. தீய வார்த்தை
கூறுவதைவிட மௌனமாக இருப்பது சிறந்தது''என்று நபி (ஸல்) அவர்கள்
கூறக் கேட்டுள்ளேன் என்று பதிலளித்தார்கள்.
(பைஹகி)