Jul 27, 2010

சமூக நல்லிணக்கம்.[1]

இந்த உலகம் முழுவதும் விரிந்து காணப் படும் உயரிய மார்க்கமகிய இஸ்லாம் என்றவிருட்சம்,தனது அமைதிஎன்ற தென்றலை அகிலம் முழுவதும்தவழ
வைத்துக்கொண்டுள்ளது. இஸ்லாம் என்ற இந்த மார்க்கத்தை நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் உலகில் எடுத்துச்சொல்ல ஆரம்பித்த போது மிகப்பெரிய எதிர்ப்புகளும் சோதனைகளும் சூராவலியாய் வீசின .என்னதான் எதிற்புகள் வந்தாலும் சொல்லப்பட்ட கருத்துகளும் அவற்றுள் பொதிந்திருந்த சமத்துவ நீதிகளும் பின் தங்கிய மக்களையும் விடுதலைக்காக ஏங்கிய வறியவர்களையும் இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டுவந்து இணைய வைத்தன. பின் தங்கிய மக்களின் மறுமலர்ச்சிக்காக பாடுபடும் யாராக இருந்தாலும் அவர்கள் மேல் தட்டு மக்களின் எதிர்ப்பை சம்பாதிதுக்கொள்ளவேண்டும் என்பது தெரிந்த ஒன்றுதான், அவ்வாறே நபிகள் நாயகம்[ஸல்]அவர்களுக்கு அந்த மக்கள் பலமான எதிர்ப்பைக்காட்டினாலும் அந்த மக்களின் உள்ளங்களில் நபியின் மரியாதை நிரைந்தே இருந்தன, "அஸ்ஸாதிq" [உண்மையாளர்] "அல் அமீன்"[நம்பிக்கையாளர்]என்ற நபியைப்பற்றிய நற்குணத்திரு நாமங்கள் aவர்களின் பாறைப்போன்ற இதயங்களில் கல்வெட்டுக்களாக பதிந்திருந்தன.காரணம் அன்றைய மக்களிடம் அன்னார் ஏற்றத்தாழ்வின்றி பாகுபாடின்றி அன்போடும் கருணையோடும் நெறியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டார்கள்,அதேசமயம் அவர்களின் முரண்பாடன கொள்கைகளுக்கு ஒத்துப்போகக்கூடியவர்களாகவும் இருக்கவில்லை. சுருங்கச்சொன்னால் உயிரை நேசித்தார்கள் ஊடல்களை நேசிக்கவில்லை மனிதனை நேசித்தார்கள் சொந்த மாசுகளையும் மாயைகளையும் நேசிக்கவில்லை. மேலும் அவர்களுக்குள் ஊடுருவிப்போயிருந்த பாழாய்ப் போன பழக்க வழக்கங்களைக் கண்டு வருந்தினார்கள், அவற்றைக் களைவது எப்படியென்று கவலைப்பட்டார்கள். அதில் வெற்றியும் கண்டார்கள். இன வெறியும்,மொழி வெறியும் மிகுந்த அன்றைய அரபு மக்களின் உள்ளத்தில் மனிதர்கள் அனைவரும் ஒரு குடும்பம்,ஒரு சமூகம் என்ற மகத்தான மனித நேயத்தை பதிய வைத்தார்கள். அருள் மறை குர் ஆனின் வசனமாகிய"மனிதர்களே!உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண்,ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம்.பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்,(அதனை வைத்து பெருமையடித்துக் கொள்வதற்காக அல்ல)"[49:13]என்ற வசனத்தின் விளக்கமாகவும் முன்மாதிரியாகவும் வாழ்ந்தார்கள் சிறுவராய் இருந்த ஃஜைத் என்பவர் மக்கவின் கடைத்தெருவில் வைத்து அடிமையாக விற்பனைச்செய்யப்பட்டார்,அவரைவிலைகொடுத்து வாங்கிய முஹம்மத் [ஸல்] அவர்களின் அருமை மனைவி கதீஜா அம்மையார் அவர்கள் அவரை தனது கணவருக்கு அன்பளிப்பு செய்து இவரை பணிவிடைக்காக வைத்துக்கொள்ளுங்கள்,எனக்கூறினார்கள். அந்த ஜைத் மக்கவின் உயர் குடும்பாகிய குரைஷி கூட்டத்தைச்சார்ந்த்தவரும் அல்லர்,அல்லது அந்த ஊரைச்சார்ந்தவரும் அல்லர், அப்படியிருந்தும் நபியவர்கள் அவரிடம் வேற்பாடு எதுவும் காட்டாமல் தன் சொந்த் பிள்ளையைப்போன்று அரவணைத்துக்கொண்டதால் அவர் நபியை தனது பெற்றோரை விட நேசித்தார். சில வருடங்களுக்குப்பிறகு அவருடைய பெற்றோர் இவர் இருக்கும் இடத்தைக்கேள்விப்பட்டு ஆவலோடு வந்து அள்ளி அணைத்துக்கொண்டு ஆனந்தமடைந்தார்கள். அதன் பிறகு அண்ணலார் நபி [ஸல்] அவர்களிடம் சென்று எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறோம், எங்கள் மகனை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று கூறிய போது,நற்குண நாயகம்[ஸல்] அவர்கள் கூறினார்கள்:இவர் உங்களுடைய மகன், உங்களுக்கு சொந்தமானவர், அவரும் நீங்களும் விரும்பினால் தாராளமாக அழைத்துப்போகலாம், அதற்காக எனக்கு எந்த தொகையும் தேவையில்லை. ஜைதின் பெற்றோர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை, பிரச்சினை இவ்வளவு இலகுவாக முடியுமென்று நினைக்கவேயில்லை,தங்களின் செல்ல மகன் ஜைதிடம் சென்றார்கள், மகனே! உன்னை அழைத்துச்செல்ல முஹம்மதிடம் அனுமதி பெற்று விட்டோம்;எனவே உடனே புறப்படு; நம் பந்தங்கள் உன்னைப்பார்க்க ஆவலோடு இருக்கிறார்கள், என்று கூறினார்கள். இதனைக்கேட்ட மகன் ஜைத், "எனதருமைப்பெற்றோர்களே!தங்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி; ஆனால் நான் தங்களோடு வரமுடியாது;காரணம் எனது நேசர் நபி [ஸல்] அவர்களை விட்டு விட்டு ஒரு போதும் என்னால் இருக்கமுடியாது,"என்று கூறினார். அவரது இந்த பதில் நபியின் அன்பான அணுகு முறையை அடையாளப்படுத்துகிறது .நல்லிணக்கம் தொடரும்...