Dec 5, 2018

தேவையற்றவைகளை தவிர்த்தல்

ஹஜ்ரத் இம்ரானிப்னுஹத்தான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
நான் ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்களைக் கறுப்பு நிறக் கம்பளியைத் தம் மீது
போர்த்தியவர்களாகத் தன்னந்தனியாக பள்ளியில் உட்கார்ந்திருக்கக் கண்டேன்.
அபூதர்! இப்படி தனியே அமர்ந்திருப்பதேன்?'' என்று நான் வினவினேன்,
கெட்ட நண்பனுடன் அமர்ந்திருப்பதைவிட தனிமை மேலானது, நல்ல
நண்பனுடன் அமர்வது தனிமையைவிட மேலானது, யாருக்கேனும் நல்ல
சொற்களைச் சொல்வது மௌனத்தைவிடச் சிறந்தது. தீய வார்த்தை
கூறுவதைவிட மௌனமாக இருப்பது சிறந்தது''என்று நபி (ஸல்) அவர்கள்
கூறக் கேட்டுள்ளேன் என்று பதிலளித்தார்கள்.
(பைஹகி)

Sep 1, 2016

அல் குர்ஆன் கூறும் அறிவியல்.

குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள்
பிற கோள்களிலிருந்து பூமிக்கு வரும் ஆபத்துக்களைத் தடுக்கும் முகடாக வானம் அமைந்துள்ளது - 2:22, 21:32, 40:64, 52:5 பூமியிலிருந்து மேலேறிச் செல்பவற்றைத் திருப்பியனுப்பும் தன்மை வானத்திற்கு உண்டு என்ற அறிவியல் உண்மை - 86:11 மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன என்ற அறிவியல் விளக்கம் - 4:56 விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் போது மனித இதயம் சுருங்கும் என்ற அறிவியல் உண்மை - 6:125 பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ முடியும் என்ற உண்மை - 2:36, 7:24, 7:25 ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் பூமியின் மீது மோதாமல் இருப்பதற்குப் புவி ஈர்ப்பு விசையே காரணம் என்ற உண்மை - 16:79, 67:19 விண்வெளியில் எவ்வளவு தொலைவு செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது என்ற பேருண்மை - 17:37 பூமி உருண்டை என்பதை உணர்த்தும் துல்கர்ணைன் பயணம் - 18:90 பூமி தொட்டிலாக அமைக்கப்பட்ட அற்புதம் - 20:53, 43:10, 78:6 பெரு வெடிப்பின் மூலமே உலகம் தோன்றியது என்ற தற்காலக் கண்டுபிடிப்பு குறித்த அறிவியல் முன்னறிவிப்பு - 21:30 கருவில் வளரும் குழந்தை மூன்று மாதங்கள் கழித்தே மனித உருவம் பெறும் - 23:14 நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது - 23:18 கடல்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்தாலும் அவற்றுக்கு இடையே தடுப்பு உள்ளது என்ற அறிவியல் உண்மை - 25:53, 27:61, 35:12 55:19,20
காற்றின் சராசரி வேகம் எவ்வளவு என்பதைக் கணித்துச் சொல்லும் அற்புதம் - 34:12 வானங்களுக்கும் பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தி - 35:41 பல கிழக்குகள், பல மேற்குகள் என்று கூறுவதன் மூலம் பூமி உருண்டை என்பதை நிரூபித்தல் - 37:5, 55:17, 70:40 பெரு வெடிப்புக்குப் பின் தூசுப் படலத்திலிருந்து கோள்கள் உருவாயின - 41:11 மனித இனம் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பூமியிலிருந்தே தங்கள் எடையை எடுத்துக் கொள்கின்றன என்ற உண்மை - 6:98, 50:4, 71:17 விண்வெளிப் பயணம் சாத்தியமே என்று அறிவித்தல் - 55:33-35 விரல் ரேகை தான் மனிதனின் முக்கிய அடையாளம் - 75:4 உயிரின உற்பத்தியில் பெண்களுக்கும் பங்குண்டு - 76:2 தேனீக்களின் வாயிலிருந்து தேன் வெளிப்படவில்லை, வயிற்றிலிருந்து வெளியாகின்றது என்ற அறிவியல் - 16:69 கடலின் மேற்புறத்தில் மட்டுமின்றி கடல் ஆழத்திலும் பேரலைகள் ஏற்படுகின்றன என்ற அறிவியல் கருத்து - 24:40 அன்னியப் பொருள் எதையும் ஏற்காத கர்ப்ப அறை, கருவை மட்டும்
குறிப்பிட்ட காலம் வரை ஏற்றுக் கொள்ளும் அற்புதம் - 13:8 பொய் சொல்வதற்கான நரம்புகள் மூளையின் முன் பகுதியில் தான் உள்ளன என்ற விஞ்ஞானக் கூற்றை முன்பே தெரிவித்தது - 96:15 காற்றிலுள்ள ஆக்ஸிஜன் நீக்கப்பட்டால் அது அனைத்தையும் அழித்து விடும் என்ற அறிவியல் உண்மை - 51:41,42 கைகளை விலாப்புறத்துடன் சேர்த்துக் கொள்வது பயத்தைக் குறைக்கும் என்ற மனோதத்துவ உண்மை - 28:32
விந்து எங்கிருந்து வெளியேறுகின்றது என்ற அறிவியல் உண்மை - 86:7 வான்வெளியிலும் பாதைகள் உண்டு என்று கூறும் வானியல் விஞ்ஞானம் - 51:7 பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:10 சூரியனும் கோள்களும் ஓடுகின்றன என்ற அறிவியல் உண்மை - 13:2, 31:29, 35:13, 36:38, 39:5 சந்திரன் பிளந்தது பற்றியும் அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி உள்ளது
பற்றியும் அறிவித்திருப்பது - 54:2 வான் எல்லை விரிவடைந்து கொண்டே செல்கின்றது என்ற அறிவியல் விளக்கம் -51:47 உயிரினங்கள் மட்டுமின்றி அனைத்திலும் ஜோடி உண்டு என்ற உண்மை - 13:3, 20:53, 36:36, 43:12, 51:49 உலக வெப்பமயமாதலால் பனிப்பாறை உருகி, கடல் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பு குறையும் என்ற அறிவியல் முன்னறிவிப்பு - 13:41, 21:44 வான் மழை எவ்வாறு உருவாகின்றது என்பது பற்றி இன்றைய விஞ்ஞானிகளின் கூற்றை அப்படியே முழு விபரத்துடன் விளக்கும் அதிசயம் - 24:43 அணு ஆயுதங்கள் தயாரிக்க முடியும் என்பது பற்றிய முன்னறிவிப்பு - 105:1-5, 11:82, 15:74, 26:173, 27:58, 51:32 "இருள்கள்" என்று பன்மையாகக் கூறுவதன் மூலம் நிறங்களுக்கு அலை நீளம் உண்டு என்பதையும், நிறத்திற்கு நிறம் அலை நீளம் மாறுபடும் என்பதையும் விளக்கியுள்ளது - 2:17, 2:19, 2:257, 5:16, 6:1, 6:39, 6:59, 6:63, 6:97, 6:122, 13:16, 14:1, 14:5, 21:87, 24:40, 27:63, 33:43, 35:20, 39:6, 57:9, 65:11 பொருட்களைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம் பற்றிய முன்னறிவிப்பு - 2:259 குளோனிங் சாத்தியம் என்பது பற்றி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியது - 19:21, 19:29,30, 21:91, 23:50 ஒட்டகத்தின் விந்தையான உடலமைப்பைப் பற்றிய விளக்கம் - 88:17, 36:41,42 இரும்பு இப்பூமியில் உருவாகவில்லை, வானிலிருந்து இறக்கப்பட்டது என்பது பற்றி அறிவியல் உண்மை - 57:25
படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன - 13:3, 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27. 78:7, 79:32 பூமி உருவானதற்குப் பின்னர் தான் மலைகள் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் கூற்றை உண்மைப்படுத்துகிறது. - 41:9,10 நவீனக் கருவிகளும் ஆய்வுக் கூடங்களும் இல்லாத காலத்தில், பாலூட்டி உயிரினங்களிடம் பால் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்பது குறித்த அறிவியல் உண்மை - 16:66 மனிதனைத் தூக்கிச் செல்லும் அளவுக்குப் பெரிய பறவைகள் உலகத்தில் இருந்தன என்ற அறிவியல் உண்மை - 22:31 வருடத்திற்கு எத்தனை மாதங்கள் என்பது நெறிமுறைப்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் 12 மாதங்கள் தான் என்று அறிவித்தது - 9:36 கவலையில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு, தவறான தகவல் மூலம் அதைவிடப் பெருங்கவலையை ஏற்படுத்தினால் கவலை மறைந்து விடும் என்ற மனோதத்துவ விளக்கம் - 3:153 முன்னறிவிப்புகள் கஃபா ஆலயம் காலாகாலம் நிலைத்திருக்குமென்ற முன்னறிவிப்பு - 2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 29:67, 95:3, 105:1-5, 106:3,4 மக்காவாசிகள் வளமான வாழ்வை அடைவார்கள் என்ற முன்னறிவிப்பு - 9:28 நபிகள் நாயகம் மக்களோடு கலந்து வாழ்ந்திருந்தும், அவர்களை மனிதர்களால் கொல்ல முடியாது என்று பிரகடனம் - 5:67 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஃபிர்அவ்ன் என்பவனது உடல் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 10:92
குதிரை, ஒட்டகங்கள் போன்ற வாகனங்களை மட்டுமே மனிதன் அறிந்திருந்த காலத்தில், நவீன வாகனங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்ற முன்னறிவிப்பு - 16:8 மக்காவில் முஸ்லிம்கள் அடி உதைகளுக்கு ஆளாகிக் கொண்டிருந்த காலத்தில், விரைவில் இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு - 73:20 முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையாக இருந்த காலத்தில், நபிகள் நாயகத்தின் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 17:76, 54:45 நபிகள் நாயகம் காலத்தில் பாரசீகர்களால் ரோமாபுரி வல்லரசு தோற்கடிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டது. ரோமாபுரி வெற்றி பெறும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாத நேரத்தில், "சில ஆண்டுகளில் ரோமாபுரி, பாரசீகத்தை வெற்றி கொள்ளும்" என்ற முன்னறிவிப்பு - 30:2,3,4 நபிகள் நாயகம் அவர்கள் உயிருக்குப் பயந்து மக்காவை விட்டு வெளியேறி அகதியாக இருந்த நிலையில், அவர்கள் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு - 28:85 பாலைவனமாக இருந்த மக்காவுக்கு, உலகின் பல பகுதிகளிலிருந்தும் கனிகள் வந்து சேரும் என்ற முன்னறிவிப்பு - 28:57 ஒரு மலைக் குகையில் வேதச் சுவடிகள் பாதுகாக்கப்பட்டது பற்றிய முன்னறிவிப்பு - 18:9 முஹம்மது நபியின் பெரிய தந்தையான அபூலஹப் என்பவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டான் என்ற முன்னறிவிப்பு - 111:1,2 பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பிரளயத்தின் போது நூஹ் என்ற இறைத்தூதர் கப்பலில் காப்பாற்றப்பட்டார். அந்தக் கப்பல் ஒரு மலை மீது பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற முன்னறிவிப்பு - 11:44, 29:15, 54:15 மதீனாவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த நயவஞ்சகர்கள், விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்ற முன்னறிவிப்பு - 33:60 குர்ஆன் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படும் என்ற முன்னறிவிப்பு - 15:9 தர்க்கரீதியான சான்றுகள் குர்ஆனைப் போல் யாராலும் இயற்ற முடியாது என்று அறை கூவல் - 2:23,24, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34 குர்ஆனில் முரண்பாட்டைக் காட்ட முடியாது என்ற அறைகூவல் - 4:82, 41:42 முந்தைய வேதங்களில் மத குருமார்கள் மறைத்தவற்றை எழுதப்படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் மூலம் குர்ஆன் வெளிப்படுத்தியது - 3:93, 7:157, 48:29 இறைத் தீர்ப்பு பெறுவதற்காகப் பிற மதத்தவர்களுக்கு அறைகூவல் விட்ட நபிகள் நாயகத்தின் ஆன்மீக பலம் - 3:61 இறை அதிகாரத்தில் நபிகள் நாயகத்துக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவிப்பதன் மூலம் தர்க்க ரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் - 3:28 குருடரைப் புறக்கணித்த நபிகள் நாயகத்தைக் கடுமையாகக் கண்டிக்கும் வசனத்தையும் மக்களுக்கு ஓதிக் காட்டி, தர்க்க ரீதியாக இறைவேதம் என்று நிரூபித்தல் - 80:1-8 நபிகள் நாயகம், தமது தூய வாழ்க்கையைத் தமது நம்பகத் தன்மைக்குச் சான்றாக ஆக்கி, அதன் மூலம் தாம் கொண்டு வந்த வேதம் உண்மையானது என்று நிறுவுதல் - 10:16 நபிகள் நாயகத்தின் மனைவி மீது களங்கம் சுமத்திய ஒருவருக்கு, மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்ட போது அதைக் குர்ஆன் கண்டிப்பதன் மூலம் இது நபிகள் நாயகத்தின் சொந்தக் கருத்து அல்ல, இறைவேதம் தான் என்று தர்க்க ரீதியாக நிரூபித்தல் - 24:22.
                            (படித்ததில் பிடித்தது )

Apr 3, 2014

குர்ஆன் பற்றிய கேள்வி பதில்கள்.

கேள்வி:குர்ஆனில் பெயர் கூறப்பட்ட ஒரே ஸஹாபி யார்? 
பதில்:நபியின் வளர்ப்பு மகன் ஜைத்[ரழி]ஆவார்கள். 

கேள்வி:குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது? 
பதில்:23 வருடங்கள். 

கேள்வி:நபிமார்களின் பெயர் சூட்டப்பட்ட சூராக்கள் குர்ஆனில் எத்தனை?
பதில்:6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்) 

கேள்வி:குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன? பதில்:இருபத்தைந்து நபிமார்கள். 

கேள்வி:குர்ஆனில் முஹம்மது என்றும் அஹ்மது என்றும் எத்தனை இடங்களில் வந்துள்ளன? 
பதில்:முஹம்மது என்று நான்கு இடங்களிலும்,அஹ்மது என்று ஒரே ஒரு இடத்திலும் வருகின்றன.

கேள்வி:குர்ஆனில் அல்ஹம்துலில்லாஹ் என துவங்கும் அத்தியாயம் எத்தனை? 
பதில்:ஐந்து சூராக்கள்.

 கேள்வி: குர்ஆனை தமிழ் மொழியில் முதன் முதலில் தர்ஜுமா [மொழிபெயர்த்தவர்] யார்? 
பதில்:ஹழ்ரத் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி [ரஹ்].

கேள்வி:குர்ஆனையும் தீனையும் கற்றுக்கொடுக்க முதன் முதலில் மதீனாவிற்கு அனுப்பப்பட்ட ஸஹாபி யார்? 
பதில்:முஸ்அப் பின் உமைர்[ரழி]அவர்கள். 

கேள்வி:குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது அதன் ஒவ்வொரு வசனத்திலும் “அல்லாஹ்”என்ற வார்த்தை வந்துள்ளது,அது எந்த சூரா? பதில்:சூரா அல் முஜாதலா. 

கேள்வி:உமர்[ரழி]அவர்களின் மன மாற்றத்திற்கு காரணமான வசனம் எந்த சூராவில் உள்ளது? 
பதில்:சூரா தாஹா.

 கேள்வி:குர்ஆனின் மத்திய பகுதி எந்த சூராவில் உள்ளது? 
பதில்:சூரா கஹ்ஃபு. 

கேள்வி:ஒரு கிழமையை பெயராக கொண்ட சூரா எது? 
பதில்:சூரா அல்ஜும்ஆ. 

கேள்வி:எந்த பறவை பேசியதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். பதில்:ஹுத் ஹுத் பறவை. 

கேள்வி:நபியின் வஃபாத்துக்கு பின் குர்ஆனை கோர்வை செய்ய ஆணையிட்டது யார்? 
பதில்:அபூபக்கர்[ரழி]அவர்கள். 

கேள்வி:நபிக்கு அடுத்த படியாக குறைஷிகளுக்கு முன்பாக முதன் முதலில் குர்ஆனை ஓதிக்காட்டியவர் யார்? 
பதில்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரழி]அவர்கள்.

நபி[ஸல்]அவர்களை பற்றிய கேள்வி பதில்கள்.

கேள்வி:கஃபா வை இடிக்க வந்த யானை படை நிகழ்ச்சிக்கு பின் நபியவர்கள் எப்போது பிறந்தார்கள்?
பதில்: ஐம்பது நாட்களுக்கு பின்.

 கேள்வி:நபி[ஸல்]அவர்களுடன் வானிபத்துக்காக சிரியா சென்ற அன்னை கதீஜா அவர்களின் அடிமையின் பெயர் என்ன? 
பதில்:மைஸரா என்பதாகும்.

 கேள்வி: நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? 
பதில்:ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள்.

 கேள்வி:நமது நபியவர்கள் எந்த நபியின் வழித்தோன்றலில் பிறந்தவர்கள்? 
பதில்:நபி இப்ராஹீம்[அலை]அவர்களின் மகன் இஸ்மாயீல்[அலை]அவர்களின் வழித்தோன்றலில்.

 கேள்வி:நபியவர்களுக்கு பால் புகட்டிய செவிலித்தாய் யார்?அவர்கள் எந்த கூட்டத்தை சார்ந்தவர்கள்? 
பதில்:அன்னை ஹலீமா ஸஃதியா[ரழி] அன்னார் பனூ ஸஃது கிளையை சார்ந்தவர்கள்.

 கேள்வி:நமது நபி[ஸல்]அவர்களால் கட்டப்பட்ட முதல் பள்ளி எது? 
பதில்:மஸ்ஜிது குபா.

 கேள்வி:மதீனாவிற்குள் வந்ததும் நபியவர்கள் யாருடைய வீட்டில் தங்கினார்கள்? 
பதில்:அபூஅய்யூபுல் அன்சாரி[ரழி]வீட்டில்.

 கேள்வி:நபியவர்கள் தவ்ரு குகையில் அபூபக்கருக்கு எவ்வாறு ஆறுதல் கூறினார்கள்? 
பதில்:”கவலைப்படாதே!நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்”. 

கேள்வி:நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் எத்தனை முறை ஹஜ் செய்தார்கள்? 
பதில்: ஒரு முறை.

 கேள்வி:நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்ட வருடம் எது? பதில்:ஹிஜ்ரி எட்டு.

 கேள்வி:நபி[ஸல்]அவர்களது ஒட்டகத்தின் பெயர் என்ன? 
பதில்:கஸ்வா.

கேள்வி:நபி[ஸல்]அவர்களுக்கு விஷம் வைத்த யூதப்பெண்ணின் பெயர் என்ன? 
பதில்:ஜைனப் பிந்தி அல்ஹாரிஸ்.

 கேள்வி:நபியவர்களோடு அன்னை கதீஜா[ரழி]அவர்கள் வாழ்ந்த காலம் எவ்வளவு? 
பதில்: 26 வருடங்கள்.

 கேள்வி:நமது நபியின் சகோதர சகோதரிகள் எத்தனை பேர்?
பதில்:யாரும் இல்லை.

 கேள்வி:நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை எங்கே இறந்தார்கள்? 
பதில்:மதீனா முனவ்வராவில்

நபிமார்களை பற்றிய கேள்வி பதில்கள்.

கேள்வி:ஒரு நபி அன்னாரின் தந்தை,தந்தையின் தந்தை,பெரிய தந்தை மற்றும் மகன் அனைவரும் நபிமார்கள் அந்த நபி யார்?
 பதில்:யஃகூப் அலைஹிஸ்ஸலாம்.

 கேள்வி:நபிமார்கள் அனைவரும் திருமணம் முடித்தனர்[நபி ஈஸா[அலை]அவர்களும் கடைசி காலத்தில் மணம் முடித்து வாழ்வர்]ஆனால் மணமுடிக்காத ஒரே நபி யார்? 
பதில்:யஹ்யா[அலைஹிஸ்ஸலாம்.

 கேள்வி:பிறக்கும் முன்பே அல்லாஹ்வினால் பெயர் சூட்டப்பட்ட நபி யார்? பதில்:யஹ்யா[அலை]அவர்கள்.

 கேள்வி:மர்யம்[அலை]அவர்களை வளர்த்த நபி யார்? பதில்:ஜகரிய்யா[அலை]அவர்கள்.

 கேள்வி:இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடக்கவிடம் எங்கே உள்ளது? 
பதில்:ஃபாலஸ்தீனத்தில் அல்ஹிப்றான்[அல்ஃகலீல்]பகுதியில். 

கேள்வி:எந்த நபியின் பெயர் குர்ஆனில் அதிகமாக வருகிறது? பதில்:மூஸா[அலைஹிஸ்ஸலாம்] அவர்களின் பெயர்.

 கேள்வி:முதன் முதலில் சிலை வணக்கத்தை விட்டும் தடுத்து தன் மக்களிடம் பிரச்சாரம் செய்த நபி யார்? 
பதில்:நூஹ்[அலைஹிஸ்ஸலாம்] அவர்கள்.

 கேள்வி:ஜாலூத் என்ற கொடுங்கோல் மன்னனை கொலை செய்த நபி யார்? பதில்:தாவூத்[அலை]அவர்கள்.

 கேள்வி:எந்த நபியின் கூட்டத்தினர் சூறாவளி காற்றினால் அழிக்கப்பட்டனர்?
 பதில்:நபி ஹூத் [அலை]அவர்களின் கூட்டம்.

 கேள்வி:நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் கடைசியாக வருகை தந்த நபி யார்? 
பதில்:நபி ஈஸா[அலை]அவர்கள்.

 கேள்வி:எந்த பெண்ணின் பிறப்பை பற்றி குர்ஆனில் வந்துள்ளது? 
 பதில்:நபி ஈஸா [அலை]அவர்களின் தாயார் மர்யம் அம்மையார். 

கேள்வி:அளவிலும் நிருவையிலும் குறைவை ஏற்படுத்த வேண்டாம் என தன் கூட்டத்துக்கு உபதேசித்த நபி யார்? 
பதில்:ஷுஐப் [அலை]அவர்கள்.

 கேள்வி:நூஹ் [அலை] அவர்களின் கப்பல் எந்த மலை மீது தரை ஒதுங்கியதாக குர்ஆன் கூறுகிறது? 
 பதில்:ஜூதி மலை மீது.

 கேள்வி:நபி இப்ராஹீம்[அலை]அவர்களுக்கு லூத் [அலை] அவர்கள் என்ன உறவுமுறை? 
 பதில்:இப்ராஹீம் [அலை] அவர்களின் சகோதரர் ஹாறான் என்பவரின் மகன்தான் லூத்[அலை]அவர்கள்.

 கேள்வி:ஸாலிஹ் [அலை] அவர்கள் காட்டிய அற்புதம் என்ன? 
 பதில்;மலை உச்சியிலிருந்து ஒட்டகத்தை அதன் குட்டியோடு வரவழைத்தார்கள்.

Feb 6, 2013

பெருமான்[ஸல்]அவர்கள் பரக்கத்தானவர்கள்

(1)பரகத்தான ரோமம்[முடி]
உஸ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி மவ்ஹப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்களின் துணைவியார் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் என்னை என் குடும்பத்தார் ஒரு தண்ணீர்ப் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்கள். (உம்மு ஸலமா ஒரு சிமிழைக் கொண்டுவந்தார்கள்.) அது வெள்ளியால் ஆனதாக இருந்தது. அதில் நபி(ஸல்) அவர்களின் முடிகளில் ஒரு முடி இருந்தது. (பொதுவாக யாரேனும்) ஒருவருக்கு கண்ணேறு அல்லது நோய் ஏற்பட்டால், அவர் தம் நீர் பாத்திரத்தை உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைப்பார். (அவர்கள் தம்மிடமிருந்த நபியவர்களின் முடியைத் தண்ணீருக்குள் முக்கி அனுப்புவார்கள். அதை நோயாளி குடிப்பார்.) நான் அந்தச் சிமிழை எட்டிப் பார்த்தேன். (அதில்) சில சிவப்பு முடிகளைக் கண்டேன்.[புகாரி]
                                    *********************
(2)பரகத்தான கைஜாடை.
ஒருமுறை அபூஹுரைரா[ரழி]அவர்கள் நபி ஸல்லல்லாஹுஅலைஹிவசல்லம் அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே!நான் தங்களிடமிருந்து நிறைய ஹதீஸ்களை கேட்க்கிறேன் ஆனால் அவை என் மனதில் பதியாமல் சீக்கிரமாக மறந்து விடுகிறது,[எனவே அவற்றை மறக்காமல் இருக்க எதாவது வழி சொல்லுங்கள்!]"என வினவினார்கள்,
கண்மணியான நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வசல்லம் அவர்கள் "அபூஹுரைரா!உனது போர்வையை எடுத்து எனக்கு முன்பாக விரி"என்றார்கள்,
அபூஹுரைரா[ரழி]அவர்களும் அவ்வாறே செய்தார்கள்,
நபியவர்கள் எதையோ அள்ளி போடுவதை போல தன் இரு கைகளாலும் சாடை செய்துவிட்டு "அபூஹுரைரா!அந்த துணியை சுருட்டி எடுத்து உன் நெஞ்சோடு அணைத்துக்கொள்!"என்றார்கள் அபூ ஹுரைரா அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
அபூ ஹுரைரா[ரழி]அவர்கள் கூறுகிறார்கள்:இந்த நிகழ்ச்சிக்குப்பின் நான் எதையும் மறக்கவே [மறதி என்னை விட்டும் அறவே நீங்கி விட்டது.][புகாரி,திர்மிதி,]
                                    ***********************
(3)நபி விரல் பட்ட மடுவில் பால் 
இப்னு மஸ்வூத்[ரழி]அவர்கள் கூறுகிறார்கள்:
இஸ்லாத்துக்கு முன்பு நான் உக்பா இப்னு அபீமுத்தீஃ என்பவரின் ஆடுகளை மேய்க்கும் அடிமையாக இருந்ததோடு வாலிபனாகவும் இருந்தேன்,
அப்போது ஒருமுறை காட்டில் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது நபி முஹம்மத்[ஸல்]அவர்களும் அபூபக்கரும் வந்தனர்,அவ்விருவரும் என்னிடம் "அருந்துவதற்கு பால் ஏதாவது உள்ளதா?"என்று வினவினர்,
நானோ இந்த ஆடுகளின் நம்பிக்கைக்குரிய மேய்ப்பாளன்தான் எனவே இதிலுருந்து பால் கறந்து தரும் உரிமை எனக்கு இல்லை எனறு கூற,இதனைக்கேட்ட நபியவர்கள் அப்படியென்றால் பால் கறக்கும் தகுதியற்ற ஆடு ஏதாவது இருந்தால் அழைத்து வாருங்கள்!என்று கூறினார்கள்,
அவ்வாறே நான் ஒரு குட்டி ஆடு ஒன்றை அழைத்து வந்து அன்னாருக்கு முன்பாக நிறுத்தினேன்
அதன் வளர்ச்சியடையாத மடுவை தன் கரத்தால் நபி தடவி கொடுக்க அது பால் சுரந்த மடுவாக பருத்துவிட்டது,அதிலிருந்து அன்னார் பால் கறக்க அதை நபியும்,அபூபக்கரும் அருந்தினர் நானும் அருந்தினேன் 
                                 ஆதாரம்:அஹ்மத்,பைஹகி,அபூதாவூத்
                                   ***********************
(4)பேரீத்தம் பழத்தில் பரகத்.
அபூஹுரைரா[ரழி]அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருமுறை சில பேரீத்தம் பழங்களை எடுத்து கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன் "யாரசூலல்லாஹ்!இந்த பேரீத்தம் பழங்களில் அபிவிருத்தி[பரகத்]உண்டாக துஆ செய்யுங்கள்!"என வேண்டிக்கொண்டேன்,
நபியவர்கள் அதனை தன் கையில் வாங்கி துஆ செய்து விட்டு என்னிடம் கொடுத்து "அபூஹுரைரா!இதை ஒரு பையில் போட்டு வைத்துக்கொள்!எப்போது தேவைப்பட்டாலும் அதில் கையை விட்டு எடுத்து சாப்பிட்டு கொள்!ஆனால் அதை திறந்து விடாதே!"என்று நபி கூறினார்கள்,
நான் அதை எத்தனையோ போர்களங்களுக்கு கொண்டு போய் அதிலிருந்து எடுத்து [எல்லோரும்]சாப்பிடுவோம்,அதை என்னோடு எப்போவுமே கூடவே இடுப்பில் வைத்திருப்பேன்,[தேவைப்படும்போது அதிலிருந்து எடுத்து சாப்பிட்டு கொள்வேன்,ஆனால் அது காலியாகவே இல்லை]கடைசியில் உஸ்மான்[ரழி]அவர்கள் கொல்லப்பட்ட அந்த[கலவரமான]நாளில் அது காணமல் போய்விட்டது.
                                                                                                     ஆதாரம்:திர்மிதி,அஹ்மத்.
                                       *********************
(5)குணமடைந்த படுகாயம் 
யஸீத் இப்னு அபீஉபைத் அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஸலமத் இப்னு அக்வஃ[ரழி]அவர்களின் கெண்டைக்காலில் பெரும் வெட்டுக்காயத்தின் அடையாளத்தை நான் கண்டு இது என்னவென்று கேட்டேன்,அதற்கு அவர்கள்:இது ஃகைபர் போரில் ஏற்பட்டது,இந்த காயத்தை கண்ட மக்கள் அப்போது சலமா இறந்து விட்டார்[இனி பிழைக்க மாட்டார்]என்றே பேசிக்கொண்டனர்,
நான் [இந்த காயத்தோடு] நபியிடம் வந்தேன்,நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த காயத்தின் மீது மூன்று முறை ஊதினார்கள் அப்போது நின்ற வலிதான் இது வரை அங்கு வலி ஏற்படவே இல்லை. [ஆதாரம்:புகாரி,அஹ்மத்,அபூதாவூத்,]
                                     *********************

                                             

Dec 23, 2012

சிறந்த பொக்கிஷம்.


மனிதர்கள் தங்கம் வெள்ளியை சேர்த்து வைத்திருந்தால் நீங்களும் பின்வரும் வார்த்தைகளை பொக்கிஷங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்!
அவை:
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ ، وأَلَعَزِيمَةَعلي الرُّشْدِ 
 وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ ، وَحُسْنَ عِبَادَتِكَ ، وَأَسْأَلُكَ َقَلْبًا سَلِيمًا ولِسَانًا صَادِقًا ، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ مِمَّا تَعْلَمُ وَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
யா அல்லாஹ்!எல்லா காரியங்களிலும் குழப்பமில்லாத உறுதியையும்,நேர்வழியின் மீது பிடிப்பையும் உன்னிடம் வேண்டுகிறேன்,உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் தன்மையையும்,உன்னை அழகிய முறையில் வணங்கும் நற்பாக்கியத்தையும் உன்னிடம் வேண்டுகிறேன்,நல்ல[எண்ணமுடைய]உள்ளத்தையும்,உண்மைமையான நாவையும் உன்னிடம் கேட்கிறேன்,மேலும் நீ எதை நல்லதென்று நினைக்கிறாயோ அதை உன்னிடம் தேடுகிறேன்,நீ எதை தீமை எனக்கருதுகிறாயோ அதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்,[எனது பட்டியலில் எதை பாவமாக]நீ அறிந்துள்ளவற்றிலிருந்தும் பாவமன்னிப்பு தேடுகிறேன்,மேலும் நீ மறைவானவற்றை மிக நன்கு அறிந்தவனாக இருக்கிறாய்.

Dec 17, 2012

உலகம் அழியப்போகிறதாம்,அப்படியா?


சிறிய அடையாளங்கள்
அமானிதங்கள் தன் இலாபப் பொருளாக கருதப்படும்,
ஜகாத் [ஏழை வரி]கடனாக நினைக்கப்படும்,

மகளின் தயவில் தாய் வாழுதல்.
பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல் 
குடிசைகள் கோபுரமாகும்
மது பல பெயர் சொல்லி அழைக்கப் படும்,
விபச்சாரமும்  மதுப்பழக்கமும் பெருகும்   
தகுதியற்றவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.  
பாலை வனம் சோலை வனமாகும்.
காலம் சுருங்குதல்
கொலைகள் பெருகுதல்
நில அதிர்வுகளும் பூகம்பங்களும் அதிகரித்தல்  
பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
பள்ளிகளில் கூச்சல்கள் அதிகமாகுதல்.
நெருக்கமான கடை வீதிகள் உண்டாகி விடுதல்.
பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருத்தல்.
உயிரற்ற பொருட்கள் பேசுதல்
பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்.
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்.
பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்.
சாவதற்கு ஆசைப்படுதல்.
இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள் உருவாக்கி விடுதல்.
முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல் 
பின்னவர்கள் முன்னவர்களை ஏசுதல்.
பெற்றோரை ஒதுக்கி,நண்பர்களை சேர்த்துக் கொள்வது,
ஆடல் அழகிகள் அதிகமாகுதல்.
இசை பெருகி விடுதல்,இன்னும் பல அடையாளங்கள் சிறியவை அனைத்தும் அநேகமாக நிகழ்ந்து விட்டன,
மேலும் பெரிய அடையாளங்கள் பல உள்ளன அவற்றில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு சொள்ளப்படுக்றது,அவை:
தஜ்ஜாலின் வருகை
தஜ்ஜாலின் வருகை பற்றி எல்லா இறைதூதர்களும் எச்சரித்துள்ளனர்.  அவன் ஒற்றைக்கண்ணன்.உங்களின் இறைவன் ஒற்றக்கண்ணன் அல்லன்.அவனது இரு கண்களுக்கிடையேகாஃபிர்-இறைமறுப்பாளன்என எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,தஜ்ஜாலின் ஒரு கண் திராட்சைபோன்று சுருங்கி இருக்கும்,அவன் வெள்ளை நிறத்தவனாக இருப்பான்.அவன் உடல் கவர்ச்சியாக இருக்கும்.
சற்று குண்டாக இருப்பான், பின்புறத்திலிருந்து நோக்கினால் அவனது தலைமுடி சுரு் சுருளாக இருக்கும்,பரந்த நெற்றியுடையவனாக இருப்பான். குள்ளமானவனாகவும், கால்கள் இடைவெளி அதிகமுள்ளவனாகவும் இருப்பான்.
அவனின் ஒரு கண் ஊனம்.மறுகண் பச்சை நிறக்கல் போலிருக்கும் என்பது தான் அவனது தோற்றத்தில் வித்தியாசமானவை ஆகும். இவையே தஜ்ஜால் பற்றிய சரியான அறிமுகம் ஆகும். இவை தவிர அவன் பற்றி கற்பனையாகக் கூறப்படுபவை யாவும் பொய்யான தகவல்கள் ஆகும்.
தஜ்ஜால் எல்லா ஊர்களுக்கும் சென்று தனது மாயா ஜாலங்களால் மக்களை வழிகெடுப்பான்.
அவன் நாற்பது நாட்கள் பூமியில் வாழ்வான்.அனைத்து இடற்களுக்கும் செல்வான். ஆனால் மஸ்ஜிதுல் ஹராம், மதீனா பள்ளி வாசல்,தூர் மஸ்ஜித், பைத்துல் முகத்தஸ் ஆகிய நான்கு பள்ளிவாசல்களையும் அவனால் நெருங்க முடியாது.
தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து தங்களையும் காப்பாற்றி, ஈமானையும் பாதுகாத்திட நபி(ஸல்) இரு வழிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள்.   
அவன் சிரியா செல்லும் வழியில் நபி ஈஸா(அலை) அவர்களால் கொல்லப்படுவான். அதன் பின் ஈஸா(அலை) அவர்கள் இந்த பூமியில் நாற்பது ஆண்டுகள் நேர்மையான தலைவராக இருந்து மக்களை வழிநடத்துவார்கள் என நபி (ஜல்) அவர்கள் கூறினார்கள்.
ஈஸா[அலைஹிஸ்ஸலாம்]வருகை.
ஈஸா[அலை]அவர்கள் கியாமத் நாளின் அடையாளமாக திகழ்கிறார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் அழகாக நமக்கு விளக்கியுள்ளனர்.
    'எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் உங்களிடம் நீதி செலுத்துபவராக, தீர்ப்பு வழங்குபவராக இறங்குவார். சிலுவையை முறிப்பார். பன்றியைக் கொல்வார். ஜிஸ்யா வரியை நீக்குவார். வாங்குவதற்கு யாருமில்லாத அளவுக்கு செல்வம் கொழிக்கும்' என்பது நபிமொழி.
போட்டி, பொறாமை, கபடம் ஆகியவை எடுபட்டுப் போகும்'அவர் இறங்கக் கூடிய காலத்தில் இஸ்லாத்தை தவிர எல்லா மதங்களையும் அல்லாஹ் அழிப்பான்'
    தஜ்ஜாலின் கொடுமை தலைவிரித்தாடும் போது தான் ஈஸா (அலை) இறங்குவார்கள்.
    தஜ்ஜாலின் நிலை இவ்வாறு இருக்கும் போது மர்யமின் மகன் மஸீஹை அல்லாஹ் அனுப்புவான். டமாஸ்கஸ் நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள வெள்ளை மனாரா(கோபுரம்)வுக்கருகில் அவர் இறங்குவார். இரண்டு வானவர்களின் சிறகுகள் மீது தன் கைகளை வைத்தவராக இறங்குவார். அவர் தலை குனிந்தால் தலையில் நீர் சொட்டும். தலையை உயர்த்தினால் முத்துப் போல் தண்ணீர் சிதறும்! அவரது மூச்சுக்காற்று அவரது பார்வையில் எட்டும் தூரம் வரை செல்லும். மூச்சுக் காற்று படுகின்ற எந்தக் காபிரும் சாகாமல் இருப்பதில்லை. பின்னர் தஜ்ஜாலைத் தேடுவார்கள். 'லுத்' (பைத்துல் முகத்தஸின் அருகிலுள்ள ஊர்) எனும் வாசலில் வைத்து அவனைக் கொல்வார்கள் என்றும் நபி (ஸல்) கூறியுள்ளார்கள,
    ஈஸா (அலை) மரணித்து சில காலத்தில் யுகமுடிவு நாள் வந்து விடும் எனவும் நபி (ஸல்) கூறியுள்ளனர்.
யுகமுடிவு நாளின் மிக நெருக்கத்தில் ஏற்படவுள்ள நிகழ்ச்சிகளில் ஈஸா (அலை) அவர்களின் வருகையும் ஒன்றாகும் என்பதை முஸ்லிம்கள் நம்பியாக வேண்டும்.                                                                   
யஃஜூஜ் மஃஜூஜ்.
உலகம் அழியக்கூடிய காலம் நெருங்கும் போது ஏற்படும் பத்து அடையாளங்களில் யஃஜுஜ், மஃஜுஜ் எனும் கூட்டத்தினரின் வருகையும் ஒன்றாகும். இக்கூட்டத்தினர் பற்றி திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தினர் இனி மேல் தான் பிறந்து வருவார்கள் என்பதி
ல்லை. நீண்ட காலமாகவே அவர்கள் இருந்து வருகின்றனர். அவர்கள் மலைகளால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் எந்த நாட்டில் இவ்வாறு அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்குக் கூறவில்லை. யுகமுடிவு நாளின் நெருக்கத்தில் அவர்கள் வெளிப்பட வேண்டுமானால் மற்ற மனிதர்கள் அவர்களை அறிந்து கொள்ளாமலிருப்பது அவசியம். அதற்காகக் கூட இறைவன் மறைத்து வைத்திருக்கலாம்.


அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள். அம்மலைகளுக்கிடையே இரும்புப் பாளங்களை அடுக்கி செம்பு உருக்கி ஊற்றப்பட்டுள்ளது. அதைத் தாண்டி வரவும் முடியாது. அதைக் குடைந்து வெளியே வரவும் முடியாது. யுக முடிவு நாளின் நெருக்கத்தில் அந்தத் தடை உடைக்கப்பட்டு அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள். ஒருவருடன் ஒருவர் முட்டி மோதிக் கொள்ளும் அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை பெருமளவில் இருக்கும் என்று 18:94-96 வரயிலான வசனங்கள் கூறுகின்றன.

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளாவர். அவர்கள் விடுவிக்கப்பட்டால் மக்களின் வாழ்க்கையைப் பாழாக்குவார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் அல்லது அதற்கும் அதிகமான சந்ததிகளை உருவாக்காமல் மரணிப் பதில்லை.உங்களில் ஒருவர் என்றால் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் ஆயிரம் என்ற கணக்கில் நரகவாசிகளின் எண்ணிக்கை இருக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் விரைந்து வருவார்கள். அவர்களில் முதலில் வருபவர்கள் தபரிய்யா என்ற ஏரியில் தண்ணீரைக் குடிப்பார்கள். பின்னால் வருபவர்களுக்குத் தண்ணீர் இருக்காது. அந்த நேரத்தில் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் இக்கூட்டத்தினால் முற்றுகையிடப்படுவார்கள்.
உலகையே கைப்பற்றி விட்டோம் என்ற மமதையில் யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் பைத்துல் முகத்தஸ் பகுதியில் உள்ள மலையில் ஏறுவார்கள். பூமியில் உள்ளவர்களை நாம் கொன்று விட்டோம். வாருங்கள் வானத்தில் உள்ளவர்களைக் கொல்வோம் என்று அவர்கள் கூறு வார்கள். தங்கள் அம்புகளை வானத்தை நோக்கி எய்வார்கள். அவர்களின் அம்புகளை ரத்தத்தில் தோய்த்து அல்லாஹ் திருப்பி அனுப்புவான்,இதை பார்த்து அவர்கள் வானையும் பிடித்து விட்டோம் துள்ளி குதிப்பார்கள்.
ஈஸா[அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முஸ்லிம்களோடு தூர்சீனா மழையில் இருப்பார்கள் அங்கு இவர்கள் செல்ல முடியாது,, அன்று ஒரு மாட்டின் தலை இன்றைய நூறு தங்கக் காசுகளுக்குச் சமமாகத் தோன்றும் அளவுக்கு முற்றுகை நீடிக்கும். ஈஸா நபியவர்கள் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள். ஒரேயடியாக யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் செத்து விழுவார்கள். பின்னர் ஈஸா நபியவர்களும், அவர்களின் தோழர்களும் தூர் மலையிலிருந்து கீழே இறங்குவார்கள். ஒரு ஜான் இடம் கூட மிச்சமில்லாமல் அவர்களின் உடல் பூமி முழுவதும் சிதறி நாற்றமெடுக்கும். அப்போது ஈஸா நபியவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் இறைஞ்சுவார்கள்.

அப்போது அல்லாஹ் ஒட்டகத்தின் கழுத்தைப் போன்ற பறவைகளை அனுப்புவான். அவை உடல்களைத் தூக்கிச் சென்று வீசி எறியும். பின்னர் அல்லாஹ் மழையைப் பொழிவிப்பான். கூடாரமோ, மண் வீடுகளோ எதையும் விட்டு வைக்காமல் அவற்றின் மேல் மழை பொழியும். பூமியைக் கண்ணாடி போல் சுத்தமாக்கும்.

"
பூமியே உனது பழங்களை முளைக்கச் செய்! உனது அபிவிருத்தியைத் திரும்பக் கொடு''என்று (இறைவனால்) பூமிக்குக் கட்டளை பிறப்பிக்கப்படும். அந்நாளில் ஒரு மாதுளையை ஒரு பெரும் கூட்டம் சாப்பிடும். அதன் தோல்களில் ஒரு கூட்டம் நிழல் பெறுவார்கள். பாலில் பரகத் செய்யப்படும். ஒரு ஒட்டகத்தில் கறக்கும் பால் ஒரு பெரும் கூட்டத்துக்குப் போதுமானதாக இருக்கும். ஒரு மாட்டில் கறக்கப்படும் பால் ஒரு கோத்திரத்துக்குப் போதுமானதாக ஆகும். ஒரு ஆட்டில் கறக்கப்படும் பால் ஒரு குடும்பத்துக்குப் போதுமானதாக அமையும். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது தூய்மையான காற்றை அல்லாஹ் அனுப்புவான். அனைத்து முஸ்லிம்களின் உயிர்களையும் அது கைப்பற்றும். மிகவும் கெட்டவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள்.அல்லாஹ் என்று சொல்பவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள், அப்போதுதான் சூரியன் மேற்கில் உதயமாகும் அதன் பிறகு ஈமான் கொள்பவர்களின் ஈமான் ஏற்றுக்கொள்ளப்படாது
என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.