Apr 3, 2014

குர்ஆன் பற்றிய கேள்வி பதில்கள்.

கேள்வி:குர்ஆனில் பெயர் கூறப்பட்ட ஒரே ஸஹாபி யார்? 
பதில்:நபியின் வளர்ப்பு மகன் ஜைத்[ரழி]ஆவார்கள். 

கேள்வி:குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது? 
பதில்:23 வருடங்கள். 

கேள்வி:நபிமார்களின் பெயர் சூட்டப்பட்ட சூராக்கள் குர்ஆனில் எத்தனை?
பதில்:6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்) 

கேள்வி:குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன? பதில்:இருபத்தைந்து நபிமார்கள். 

கேள்வி:குர்ஆனில் முஹம்மது என்றும் அஹ்மது என்றும் எத்தனை இடங்களில் வந்துள்ளன? 
பதில்:முஹம்மது என்று நான்கு இடங்களிலும்,அஹ்மது என்று ஒரே ஒரு இடத்திலும் வருகின்றன.

கேள்வி:குர்ஆனில் அல்ஹம்துலில்லாஹ் என துவங்கும் அத்தியாயம் எத்தனை? 
பதில்:ஐந்து சூராக்கள்.

 கேள்வி: குர்ஆனை தமிழ் மொழியில் முதன் முதலில் தர்ஜுமா [மொழிபெயர்த்தவர்] யார்? 
பதில்:ஹழ்ரத் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி [ரஹ்].

கேள்வி:குர்ஆனையும் தீனையும் கற்றுக்கொடுக்க முதன் முதலில் மதீனாவிற்கு அனுப்பப்பட்ட ஸஹாபி யார்? 
பதில்:முஸ்அப் பின் உமைர்[ரழி]அவர்கள். 

கேள்வி:குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது அதன் ஒவ்வொரு வசனத்திலும் “அல்லாஹ்”என்ற வார்த்தை வந்துள்ளது,அது எந்த சூரா? பதில்:சூரா அல் முஜாதலா. 

கேள்வி:உமர்[ரழி]அவர்களின் மன மாற்றத்திற்கு காரணமான வசனம் எந்த சூராவில் உள்ளது? 
பதில்:சூரா தாஹா.

 கேள்வி:குர்ஆனின் மத்திய பகுதி எந்த சூராவில் உள்ளது? 
பதில்:சூரா கஹ்ஃபு. 

கேள்வி:ஒரு கிழமையை பெயராக கொண்ட சூரா எது? 
பதில்:சூரா அல்ஜும்ஆ. 

கேள்வி:எந்த பறவை பேசியதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். பதில்:ஹுத் ஹுத் பறவை. 

கேள்வி:நபியின் வஃபாத்துக்கு பின் குர்ஆனை கோர்வை செய்ய ஆணையிட்டது யார்? 
பதில்:அபூபக்கர்[ரழி]அவர்கள். 

கேள்வி:நபிக்கு அடுத்த படியாக குறைஷிகளுக்கு முன்பாக முதன் முதலில் குர்ஆனை ஓதிக்காட்டியவர் யார்? 
பதில்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரழி]அவர்கள்.

நபி[ஸல்]அவர்களை பற்றிய கேள்வி பதில்கள்.

கேள்வி:கஃபா வை இடிக்க வந்த யானை படை நிகழ்ச்சிக்கு பின் நபியவர்கள் எப்போது பிறந்தார்கள்?
பதில்: ஐம்பது நாட்களுக்கு பின்.

 கேள்வி:நபி[ஸல்]அவர்களுடன் வானிபத்துக்காக சிரியா சென்ற அன்னை கதீஜா அவர்களின் அடிமையின் பெயர் என்ன? 
பதில்:மைஸரா என்பதாகும்.

 கேள்வி: நபித்துவத்திற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? 
பதில்:ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகள்.

 கேள்வி:நமது நபியவர்கள் எந்த நபியின் வழித்தோன்றலில் பிறந்தவர்கள்? 
பதில்:நபி இப்ராஹீம்[அலை]அவர்களின் மகன் இஸ்மாயீல்[அலை]அவர்களின் வழித்தோன்றலில்.

 கேள்வி:நபியவர்களுக்கு பால் புகட்டிய செவிலித்தாய் யார்?அவர்கள் எந்த கூட்டத்தை சார்ந்தவர்கள்? 
பதில்:அன்னை ஹலீமா ஸஃதியா[ரழி] அன்னார் பனூ ஸஃது கிளையை சார்ந்தவர்கள்.

 கேள்வி:நமது நபி[ஸல்]அவர்களால் கட்டப்பட்ட முதல் பள்ளி எது? 
பதில்:மஸ்ஜிது குபா.

 கேள்வி:மதீனாவிற்குள் வந்ததும் நபியவர்கள் யாருடைய வீட்டில் தங்கினார்கள்? 
பதில்:அபூஅய்யூபுல் அன்சாரி[ரழி]வீட்டில்.

 கேள்வி:நபியவர்கள் தவ்ரு குகையில் அபூபக்கருக்கு எவ்வாறு ஆறுதல் கூறினார்கள்? 
பதில்:”கவலைப்படாதே!நிச்சயமாக அல்லாஹ் நம்மோடு இருக்கிறான்”. 

கேள்வி:நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையில் எத்தனை முறை ஹஜ் செய்தார்கள்? 
பதில்: ஒரு முறை.

 கேள்வி:நபியவர்கள் மக்காவை வெற்றி கொண்ட வருடம் எது? பதில்:ஹிஜ்ரி எட்டு.

 கேள்வி:நபி[ஸல்]அவர்களது ஒட்டகத்தின் பெயர் என்ன? 
பதில்:கஸ்வா.

கேள்வி:நபி[ஸல்]அவர்களுக்கு விஷம் வைத்த யூதப்பெண்ணின் பெயர் என்ன? 
பதில்:ஜைனப் பிந்தி அல்ஹாரிஸ்.

 கேள்வி:நபியவர்களோடு அன்னை கதீஜா[ரழி]அவர்கள் வாழ்ந்த காலம் எவ்வளவு? 
பதில்: 26 வருடங்கள்.

 கேள்வி:நமது நபியின் சகோதர சகோதரிகள் எத்தனை பேர்?
பதில்:யாரும் இல்லை.

 கேள்வி:நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தை எங்கே இறந்தார்கள்? 
பதில்:மதீனா முனவ்வராவில்

நபிமார்களை பற்றிய கேள்வி பதில்கள்.

கேள்வி:ஒரு நபி அன்னாரின் தந்தை,தந்தையின் தந்தை,பெரிய தந்தை மற்றும் மகன் அனைவரும் நபிமார்கள் அந்த நபி யார்?
 பதில்:யஃகூப் அலைஹிஸ்ஸலாம்.

 கேள்வி:நபிமார்கள் அனைவரும் திருமணம் முடித்தனர்[நபி ஈஸா[அலை]அவர்களும் கடைசி காலத்தில் மணம் முடித்து வாழ்வர்]ஆனால் மணமுடிக்காத ஒரே நபி யார்? 
பதில்:யஹ்யா[அலைஹிஸ்ஸலாம்.

 கேள்வி:பிறக்கும் முன்பே அல்லாஹ்வினால் பெயர் சூட்டப்பட்ட நபி யார்? பதில்:யஹ்யா[அலை]அவர்கள்.

 கேள்வி:மர்யம்[அலை]அவர்களை வளர்த்த நபி யார்? பதில்:ஜகரிய்யா[அலை]அவர்கள்.

 கேள்வி:இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடக்கவிடம் எங்கே உள்ளது? 
பதில்:ஃபாலஸ்தீனத்தில் அல்ஹிப்றான்[அல்ஃகலீல்]பகுதியில். 

கேள்வி:எந்த நபியின் பெயர் குர்ஆனில் அதிகமாக வருகிறது? பதில்:மூஸா[அலைஹிஸ்ஸலாம்] அவர்களின் பெயர்.

 கேள்வி:முதன் முதலில் சிலை வணக்கத்தை விட்டும் தடுத்து தன் மக்களிடம் பிரச்சாரம் செய்த நபி யார்? 
பதில்:நூஹ்[அலைஹிஸ்ஸலாம்] அவர்கள்.

 கேள்வி:ஜாலூத் என்ற கொடுங்கோல் மன்னனை கொலை செய்த நபி யார்? பதில்:தாவூத்[அலை]அவர்கள்.

 கேள்வி:எந்த நபியின் கூட்டத்தினர் சூறாவளி காற்றினால் அழிக்கப்பட்டனர்?
 பதில்:நபி ஹூத் [அலை]அவர்களின் கூட்டம்.

 கேள்வி:நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் கடைசியாக வருகை தந்த நபி யார்? 
பதில்:நபி ஈஸா[அலை]அவர்கள்.

 கேள்வி:எந்த பெண்ணின் பிறப்பை பற்றி குர்ஆனில் வந்துள்ளது? 
 பதில்:நபி ஈஸா [அலை]அவர்களின் தாயார் மர்யம் அம்மையார். 

கேள்வி:அளவிலும் நிருவையிலும் குறைவை ஏற்படுத்த வேண்டாம் என தன் கூட்டத்துக்கு உபதேசித்த நபி யார்? 
பதில்:ஷுஐப் [அலை]அவர்கள்.

 கேள்வி:நூஹ் [அலை] அவர்களின் கப்பல் எந்த மலை மீது தரை ஒதுங்கியதாக குர்ஆன் கூறுகிறது? 
 பதில்:ஜூதி மலை மீது.

 கேள்வி:நபி இப்ராஹீம்[அலை]அவர்களுக்கு லூத் [அலை] அவர்கள் என்ன உறவுமுறை? 
 பதில்:இப்ராஹீம் [அலை] அவர்களின் சகோதரர் ஹாறான் என்பவரின் மகன்தான் லூத்[அலை]அவர்கள்.

 கேள்வி:ஸாலிஹ் [அலை] அவர்கள் காட்டிய அற்புதம் என்ன? 
 பதில்;மலை உச்சியிலிருந்து ஒட்டகத்தை அதன் குட்டியோடு வரவழைத்தார்கள்.