Jan 23, 2012

(1-வது நாள்)வழிகாட்டும் ஒளி விளக்கு நபி[ஸல்]அவர்கள்

அகிலத்துக்கு வழி காட்ட வந்த அருமை நபி[ஸல்]அவர்களின் பிறந்த மாதம் நம்மில் உதயமாகி இருக்கிறது,அல்லாஹ்வின் கட்டளையை மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை நேர் வழிப் படுத்த வந்த இறைத்தூதர்கள் லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள்,அவர்களில் கடைசியாக வந்தவர்கள்தான் நமது கண்மணி நாயகம் [ஸல்]அவர்களாவர்,
அன்னாரின் வாழ்வு முறை உலக மக்களின் வாழ்க்கைக்கு ஒரு சிறந்த முன் மாதிரியாகும்,

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வின்மீதும்,இறுதிநாளின்மீதும்ஆதரவுவைத்து,அல்லாஹ்வைஅதிகம்தியானிப்போருக்குநிச்சயமாகஅல்லாஹ்வின்தூதரிடம்ஓர்அழகியமுன்மாதிரிஉங்களுக்குஇருக்கிறது. 33:21.

நம்மைப் படைத்த அல்லாஹ் எவ்வளவோ அருட்கொடைகளை நம்மீது பொழிந்திருக்கிறான், உலகில் நமக்கு ஒருவர் ஏதாவது ஒரு சின்ன உதவி செய்து விட்டால் அவருக்கு நன்றி சொல்கிறோம் அதுமட்டுமின்றி அவரை எப்போதும் மறப்பதே இல்லை அவர் மீது நம்மை அறியாமல் அன்பு ஏற்படுகின்றது,சாதாரனமான உதவிகளையே நம்மால் மறக்க முடிவதில்லை அல்லாஹ் நமக்கு கொடுத்துள்ள செல்வங்கள் கொஞ்ச நஞ்சமல்லவே?எனவே இத்தகைய இறைவனாகிய அல்லாஹ்வை எப்படி அன்பு வைக்காமல் இருக்க முடியும்?சரி இவ்வாறு அன்பு வைப்பதின் அடையாளமென்ன?அதுதான் நமது உயிரினும் மேலான உத்தம நபி[ஸல்]அவர்களைப் பின்பற்றி வாழ்வதாகும்,

அல்லாஹ் தனது திருமறை குர்ஆனில் கூறுகிறான்:

(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்,33:31
(நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.3:32


இவ்வாறு அல்லாஹ் நபியின் வழிகாட்டலுக்கு அங்கீகாரம் கொடுப்பதிலிருந்தே அந்த இறைத்தூதரின் கண்ணியமான வாழ்வு எவ்வளவு தூய்மையாக இருந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறதல்லவா?காரணம் இறைத்தூதர் முஹம்மது[ஸல்]அவர்களின் வாழ்க்கை முறை, வழிகாட்ட வந்த வான்மறை குர் ஆனுக்கு ஒரு விளக்கவுரையாக அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.
நபியின் வாழ்வில் இம்மை மறுமைக்கான மகத்தான வெற்றி இருப்பதால்தான்

அல்லாஹ் மற்றொரு இடத்தில் கூறுகிறான்:
 மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன்.59:7

மேலும் நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கையில் எல்லா துறைகளுக்கும் வழி காட்டுதல் உள்ளன,வணக்கம் வனிகம் கல்வி அரசியல் தொழில் குடும்பம் மற்றும் போர் இப்படி நபியின் வழி காட்டல் நுழையாத துறையே இல்லை எனலாம்.