Aug 25, 2010

4-வது நாள் [நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்].

link

அல்லாஹ் கூறுகிறான்:[நம்பிக்கையாளர்களே!]உங்களில் ஒரு கூட்டத்தார்[மனிதர்களை சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச்செய்யும்படி ஏவி தீமையை விட்டும் தடுத்துக் கொண்டும் இருக்கட்டும்.இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.[3:104].நன்மையை ஏவி தீமையைத்தடுக்கும் பணி,ஒரு மகத்தான சேவையாகும்.அந்த பணி விடு பட்டதே இன்றைய பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் என்று கூட சொல்லலாம்.ஒரு முறை நபி[ஸல்]அவர்கள் உம்முல் முஃமினீன்[விசுவாசிகளின் தாய்]ஜைனப் பிந்த் ஜஹ்ஷ்[ரழி]அவர்களின் வீட்டுக்கு வருகிறார்கள்,அன்னாரின் முகத்தில் பதட்டமும் கவலையும் தெரிகிறது.அப்போது நபியவர்கள்"நெருங்கி வரும் தீமையினால் அரபுகளுக்கு அழிவுதான் யஃஜூஜ் மஃஜூஜ்களின் தடையிலிருந்து இந்த அளவு திறந்து விட்டது" என்று கூறியவர்களாக தங்களின் பெரு விரல் மற்றும் கலிமா விரலின் நுனிகளை இணைது வட்டமாக காட்டினார்கள். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த அன்னை ஜைனப்[ரழி]அவர்கள் "யா ரஸூலல்லாஹ்!எங்களில் நல்லோர்கள் இருக்கும் நிலையிலும் எங்களுக்கு அழிவு வருமா?" என்று வினவ,நபி[ஸல்]அவர்கள் அருளினார்கள்:ஆம் தீமைகள் மிகைத்து விடும்போது.[நூல்:புகாரி, முஸ்லிம்].தீமைகள் மிகைத்தல்,என்பதற்கு தனியாக விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமே இன்றைக்கு கிடையாது காரணம், அந்த அளவு எங்கு நோக்கினும் பாவங்கள் நன்மைகளை மிகைத்து தலைவிரித்து ஆடிக்கொண்டிருப்பதை நன்கறிவோம், இந்த நிலையில் நமது கடமைகள் என்ன வென்பதை ஒவ்வருவரும் விளங்க வேண்டும்.தீமைகளின் மிகைப்பினால் ஏற்படும் இறைத்தண்டனைகள் அந்த தீமைகளைச்செய்தவர்கலை மட்டும் பாதிப்பதில்லை,மாறாக[நல்லோருக்குப் பெய்யும் மழை எல்லோருக்கும்]என்பதை போல,அனைவரையுமே சேர்த்து பிடிக்கும்,[அல்லாஹ் காப்பானாக!]ஒரு முறை அபூ பக்கர்[ரழி]அவர்கள் கூறினார்கள்: மனிதர்களே!நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுடைய வசனமாகிய'விசுவாசிகளே!நீங்கள் [தவறான வழியில் செல்லாது]உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்!.நீங்கள் நேரான வழியில் சென்றால் வழி தவறிய யாருடைய தீங்கும் உங்களை பாதிக்காது.[5:105].என்ற வசனத்தை ஓதுகிறீர்கள்,நபி[ஸல்] அவர்கள் கூற்யதை நிச்சயமாக நான் கேட்டுள்ளேன்,அன்னார் கூறினார்கள்"திட்டமாக மனிதர்கள் அனியாயம் செய்பவனை கண்டும் அவனை[க் கண்டு கொள்ளாமல்] அதனை விட்டும் தடுக்காமல் இருந்துவிட்டால்,அல்லாஹ் தனது வேதனையை[அதை செய்தவர்கள் செய்யாதவர்கள்]அனைவரின் மீதும் பொதுவாக இறக்கி விடுவான்.[நூல்:அபூ தாவூத்,திர்மிதீ].மற்றொரு முறை நபி[ஸல்]அவர்கள் இதற்கு ஒரு உதாரணம் கூறி விளக்கினார்கள்:அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கும்,அவற்றை பேணாமல் வாழுகிறவர்களுக்கும் உதாரணமாகிறது,ஒரு கப்பலில் இரு பிறிவினர் பயணம் செய்தனர்,அவர்களில் ஒரு பிறிவினர் மேல் தளத்திலும் மறு பிறிவினர் கீழ் தளத்திலுமாக பயணித்தனர். அத்தியாவசியமான தேவைக்குரிய தண்ணீர் மேல் தளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்ததால் கீழ் தளத்தில் உள்ளவர்களுக்கு ஒவ்வொரு முறையும் மேலே சென்று வருவது சிரமமாக இருந்தது.எனவே தண்ணீர் தேவைப் பட்டால் நமக்கு கீழே தண்ணீர் இவ்வளவு இருக்க நாம் ஏன் மேலே சென்று கஷ்டப் படவேண்டும்,கீழே ஒரு ஓட்டைப்போட்டு தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம்,என்றுமுடிவெடுத்தனர்.இந்த ஆபத்தான முடிவக்கண்டு அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் தடுத்தால் அனைவரும் தப்பித்துக் கொள்ளலாம்,அவ்வாறு தடுக்காமல் கீழே ஓட்டைப் போட்டால் நமக்கென்ன என்று இருப்பார்களானால் தண்ணீர் உள்ளே புகுந்து அனைவரும் அழிந்து போவது உறுதி.[இவ்வாறே தீமையைக் கண்டும் தடுக்கவில்லையெனில் அதனால் ஏற்படும் தண்டனை அனைவரையும் அழித்து விடும்].[நூல்:புகாரி].இதையே அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:நீங்கள் வேதனையை பயந்து கொள்ளுங்கள்!அது அனியாயக்காரர்களை மட்டும் பிடிக்கும் என்பதல்ல,' [முடிவில் அது உங்களையும் சூழ்ந்துகொள்லலாம்]நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடுமையானவன் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.[8:25]