Dec 21, 2011

அண்ணலாரின் அழகிய அணுகுமுறை


அல்லாஹ் குர்ஆனில் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பான அணுகுமுறைக்கு அங்கீகாரம் சொல்லும் வகையில் கூறுகிறான்.
(நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டீர்கள். நிங்கள் கடுகடுப்பானவராகவும், கடினஉள்ளம் கொண்ட வராகவும் இருந்தீர்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள்.
அல்குர்ஆன். 3:159
குர்ஆ;னின் விளக்கமாகவே நடந்து காட்டியகோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த வசத்தின் ஒளியில் அன்பின் இலக்கணமாக வாழ்ந்தார்கள். அன்னாரின் சொல்லும் செயலும் சுற்றியுள்ளவர்களை பற்றி இழுத்து அன்னாரை பாசம் கொள்ளச் செய்தான்'
ஏழை, பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், அரபி அரபியில்லாதவன் என்ற எந்த பாகுபாடுமற்ற பரிசுத்தமான அன்னாரின் சமத்துவ நடவடிக்கைகள் அனைவரையும் ஒரே கொடியின் கீழ் கட்டிப்போட்டு ஒரு குடும்பம் என்ற உள்ளார்ந்த அன்பை ஊட்டி செம்மைப்படுத்தியது.
எவர் நம்மமிலுள்ள சிறுபிள்ளைகளிடம் அன்பு கட்டவில்லையோ, பெரியவர்களுடன மறியாதையோடு நடந்து கொள்ளவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல, என்ற இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு வரிச்சொல் சிறியவர் பெரியவர் அனைவருக்கும் சிறந்த நடைமுறையை கற்றுத்தரும் அழகிய போதம் எனலாம். இந்த போதம் நபியின் உண்மையான வாழ்வின் பிரதிபளிப்புதான் என்றால் அது மிகையல்ல.
மாபெரும் தலைமைக்கு சொந்தக்காரராகிய நபியவர்கள் மக்களிடம் பழகும்போது சாதாரண தோழனைப்போல சகஜமாக நடந்து கொண்டது தலைவர்கலுக்கெல்லாம் சிறந்த முன்மாதியாகும்.
அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட சிறந்த ஒழுக்கங்களைக் கொண்டவர்கள் எவருமில்லை. அவர்களுடைய தோழர்களோ, அவர்களுடைய வீட்டில் உள்ளவர்களோ அழைத்தால் அவர்கள் உடனே பதில் தந்த உதவி செய்தார்கள்.
அனஸ் (ரளி) அவர்கள் அருளினார்கள்: யாராவது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காதுகளில் (ரகசியம்) பேசினால் பேசுபவர் தனது வாயை எடுக்கும்வரை தமது காதுகளைத் திருப்பமாட்டார்கள். யாராவது அவர்களது கரங்களைப் பற்றினால், அவர் நபியின் கரத்தை விட்டு விட்டு விலக்கி கொள்ளாதவரை நபியவர்கள் தனது கரத்தை விலக்கிக் கொள்ளமாட்டார்கள். யாரையாவது பார்த்தால் முதன்முதலாக முந்திக்கொண்டு ஸலாம் முகமன் கூறுவார்கள். தமது தோழர்களைக் கண்டால் முதன்முதலாக முந்திக் கொண்டு அவர்களது கரங்களைப் பற்றுவார்கள் நபியாகத்தான் இருப்பார்கள்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யார் சந்திக்க வந்தாலும் அவர்கள் தவறாமல் கண்ணியப்படுத்துவார்கள். தங்களுடைய மேலாடையை விரித்து அமரச் சொல்வார்கள் தங்களுடைய முதுகுக்குப்பின்னால் வைத்துக்கொள்ளும் மெத்தையை தன்னை பார்க்க வருபவர்களின் முதுகுக்கு வைத்துக் கொடுப்பார்கள். வருபவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரித்த துணியில் அமர்ந்திட தயங்குவார்களானால் அவரை வற்புறுத்தி இருக்கச் செய்வார்கள்.
எதிரிகளாகவே இருந்தாலும் ஏந்தல் நபியின் வார்த்தைகள் இனிமையும் இங்கிதமும் நிறைந்தே வெளிவரும் இறுக்கமோ, இடைஞ்சலோ இல்லாத இறுக்கமான உறவுக்குரியவராகவே அவர்களைக் கருதத்தோன்றும் வகையில் நடந்து கொள்வார்கள்.
ஒரு முறை ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்திக்க வந்திருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு உள்ளே வர அனுமதியளித்து விட்டு அவரைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் அந்த மனிதரைப்பற்றி இவர் அவரது கூட்டத்தினரில் மிகவும் தீயவர் என்பனபோன்ற வார்த்தைகளைக் கூறினாhல்.
சற்று நேரத்தில் அந்த மனிதர் உள்ளே வந்தபோது நபியவர்கள் அவரிடம் மிகவும் மறியாதையாக பாய் எடுத்துப்போட்டு அமரவைத்து உபசரிப்போடு நடந்து கொண்டார்கள்.
அந்த மனிதர் அங்கிருந்து சென்றபிறகு அன்னை ஆயிஷா (ரளி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'யா ரஸுலல்லாஹ்! வந்து சென்ற மனிதரைப்பற்றி தீயவர் என்று பேசிவிட்டு அவர் வந்தவுடன் அவரிடம் மறியாதையோடு நடந்து கொண்டீர்களே? காரணம் என்ன?'' என்று வினவியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள். ஆயிஷா! நான் யாரிடத்திலாவது கடுமையாக நடந்து கொண்டதைப் பார்த்ததுண்டா?
அன்னை ஆயி்ஷா[ரளி] அவர்களது கேள்விக்கு நபியவர்களின் இந்த பதில் அன்னாரின் இயல்பான பழக்கத்தைக் காட்டுகிறது இது ஆரம்பத்தில் அல்லாஹ் கூறிய வசனத்தின் கருத்தை ஒத்திருக்கிறது.
ஒருமுறை நபியவர்களிடம் ஒருவர் வந்து உதவி கேட்டார். கொஞ்சம் உதவி செய்து விட்டு போதுமா? என்று கேட்க வந்தவர் எனக்கு போதாது என்று ஒருமாதி்ரியாகக்கூற நபித்தோழர்கள்அந்தமனிதரைஅடிக்கபாய்ந்தனர்,நபி[ஸல்]அவர்கள் அவரை அனுப்பி விட்டு அவரைத் தனியாகச்சென்று அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு திரும்பினார்கள்.
அடுத்த நாள் வந்த அந்த மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்; அவர்களை தாங்கள் எனக்கு போதுமான அளவு உதவிவிட்டீர்கள் என்று மனதார புகழ்ந்தபோது நபித்தோழர்கள் மகிழ்ந்தனர்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் உங்களுக்கு மத்தியில் எனது உதாரணம்: ஒருவர் ஒரு பெண் ஒட்டகையை வளர்த்தார் ஒருமுறை அது கட்டவிழ்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தபோது
அதைதப்பிடித்துக் கொடுப்பதற்காக அருகிலிருந்த அனைவரும் துரத்தினர். அந்த ஒட்டகையோ இன்னும் வேகமாக வெருண்டு ஓட ஆரம்பித்தது இதனைக்கண்ட அந்த ஒட்டகையின் சொந்தக்காரர் அந்தமக்களைப்பார்த்து 'எனது ஒட்டகையை எப்படி வழிக்கொண்டு வருவது என்பத எனக்குத் தெரியும் என்று கூறியவராக சில புற்களைக் கையில் ஏந்தியவராக அந்த ஒட்டகையின் அருகில் காட்டியபோது அந்த ஒட்டகை பணிந்த நிலையில் வந்தது, உடனே அவர் அதைப்பிடித்துக்கொண்டார்.
இந்த உதாரணத்தின் மூலம் இந்த மக்கள் சமுதாயத்தை  அணுவது, அரவணைப்பது, எவ்வாறு என்ற அழகான அணுகுமுறையை அண்ணலார் பெற்றிருந்தார்கள் என்பது விளங்கும்.