Aug 23, 2010

3-வது நாள்[கடன்

அல்லாஹ் கூறுகிறான்: அன்றி (கடன் வாங்கியவன் அதனைத் தவணைப்படி தீர்க்க முடியாமல்)அவன் கஷ்டத்திலிருந்தால்(அவனுக்கு)வசதி ஏற்படும் வரையில் எதிர்பார்த்திருங்கள்! மேலும் (இதிலுள்ள நன்மைகளை)நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்(அதை அவனுக்கே)தானம் செய்து விடுவது(பிறருக்கு தானம் செய்வதை விட)உங்களுக்கு நன்மையாகும்.(2:280).கடனைப்பற்றி நமது மார்க்கம் நல்ல பல கருத்துக்களை கூறியுள்ளன,அவற்றில் கடன் பெற்றவர் நடந்து கொள்ள வேண்டிய முறைகளும்,கடன் கொடுத்தவர் கடனாளியிடத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறைகளும் அடங்கும். கடன் கொடுத்தவர். கடன் கொடுத்தவர் நடந்து கொள்ளவேண்டிய நளினமான முறைகளையே மேற்சொன்ன வசனம் போதிக்கிறது.நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:அல்லாஹ்வுடைய நிழலைத்தவிர மற்ற எந்த நிழலும் இல்லாத அந்த(கியாமத்)நாளில்,அந்த நிழலில் தனக்கும் இடம் கிடைக்கவேண்டும் என்று யாராவது விரும்பினால்,அவர்தன்னிடத்தில் கடன் பெற்று கஷ்டப்படுகின்ற மனிதரிடத்தில் மென்மையோடு நடந்து கொள்ளட்டும்! அல்லது அந்த கடனை மன்னித்து விட்டு விடட்டும்!.(நூல்:தப்ரானி)..மற்றொரு ஹதீஸில்,எவர் தன்னிடம் கடன் பெற்றவருக்கு தவணையை நீட்டித்து சலுகைச்செய்தாரோ அவர் நீட்டித்துக் கொடுத்த ஒவ்வொரு நாளும் கடன் தொகையின் அளவுக்கு தர்மம் செய்த நன்மையை அல்லாஹ் எழுதுகிறான்(நூல்:அஹ்மத்) என்று வந்துள்ளது. மற்றொரு ஹதீஸில்,நபி(ஸல்)அவர்கள் அருளினார்கள்:எவர் தனது துஆ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும்,தனது துன்பங்கள் தீர்க்கப்படவேண்டும் என்றும் விரும்புவாரோ அவர் கஷ்டப்படக்கூடியதனதுகடனாளிக்குதவணைக்கொடுக்கட்டும்.(நூல்:அஹ்மத்). அபூகதாதா(ரழி)அவர்களிடம் ஒருவர் கடன் வாங்கியிருந்தார்.கடனைத் திருப்பிக் கேட்பதற்காக அவரிடம் அபூகதாதா(ரழி)அவர்கள் வரும்போதெல்லாம் அந்த மனிதர் வீட்டுக்குள் சென்று ஒழிந்துக் கொள்வார். ஒருமுறை அந்த நபரின் வீட்டுக்கு அன்னார் வந்த போது எதார்த்தமாக அந்த வீட்டுக்குள்ளிருந்து ஒரு சிறுவன் வெளியே வந்தான், அவனை நோக்கி அபூகதாதா(ரழி)அவர்கள்;உனது தந்தை எங்கே?என்று வினவ,அவன் தனது தந்தை வீட்டுக்குள் இருப்பதாகச்சொல்லிவிட்டான்.உடனே அந்த வீட்டுக்கு முன்னால் நின்றுகொண்டு"நண்பரே!வெளியில் வாரும்!நீர் உள்ளே பதுங்கி இருப்பது எனக்குத்தெரிந்து விட்டது".என்று குரல் கொடுக்க அம்மனிதரும் வெளியே வந்தார். என்னைக்கண்டு ஒழிந்துக்கொள்ள காரணமென்ன?,என்று அபூகதாதா(ரழி)அவர்கள் கேட்டார்கள்.அதற்கு அம்மனிதர்,நான் கஷ்டப்படுபவன், தங்களுக்கு முன்னால் வந்து அந்த தங்கடத்தைப்பற்றி கூற எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால்தான் தங்களுக்கு முன்னால் வருவதற்கு வெட்க்கப்பட்டு ஒழிந்துக் கொண்டேன்,என்று கூறினார்.இதனைக்கேட்ட அபூகதாதா(ரழி)அவர்கள் உண்மையாகவா நீ கஷ்டப்படுகிறாய்?எனக்கேட்டார்கள்.அம்மனிதரும் ஆம் என்று உறுதியாகக்கூறினார்.உடனே அன்னார் அழுது விட்டார்கள்.காரணம் கேட்டபோது அன்னார் கூறினார்கள்;நபி(ஸல்)அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்"எவர் கடனாளிக்கு அவகாசம் கொடுத்து உதவினாரோ,அல்லது கடனை மன்னித்து விட்டு விடுகிறாரோ அவர் மறுமை நாளில் அர்ஷின் நிழலில் இருப்பார்.(நூல்:புகாரி) கடனை திரும்ப நிறைவேற்றுவது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களிடம் ஒருவர் கேட்டார்: "அல்லாஹ்வின் தூதர் அவர்களே!நான் இறைவனின் பாதையில் போரிட்டு அதில் கொல்லப்பட்டால் எனது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுமா?"அதற்கு பதில் கூறிய நபி(ஸல்)அவர்கள்"ஆம்,ஆனால் நீங்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும்,நன்றியுடையவராக இருந்திருக்க் வேண்டும்,எதிரியைத் தாக்குவதில் முன்னணியில் நின்று போரிட்டிருக்க வேண்டும்,பின் வாங்கியிருக்கக் கூடாது,அல்லாஹ்வின் திருப்தி ஒன்றையே நாடுபவராக இருந்திருக்க வேண்டும்,போரில் கொல்லப் பட்டிருக்க வேண்டும்"எனக்கூறினார்கள். பின்னர் சிறிது நேரத்திற்குப் பின்,கேள்விக் கேட்ட அந்த மனிதரிடம்"நீங்கள் என்ன சொன்னீர்கள்?"என்று வினவினார்கள்.அவர் மீண்டும் அதே கேள்வியையே திரும்பக் கேட்டார்.மீண்டும் நபி(ஸல்)அவர்கள் அந்த மனிதரிடம்"நீங்கள் என்ன சொன்னீர்கள்?" எனக் கேட்டார்கள். அவரும் அதே கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போது நபி (ஸல்)அவர்கள் "உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்,ஆனால் உங்களுடைய கடன் கள் மன்னிக்கப் படமாட்டாது,இந்த செய்தியை ஜிப்ரீல்(அலை)அவர்கள் இப்போதுதான் வ்ந்து சொல்லிச்சென்றார்கள்.என்று அருளினார்கள்.(நூல்:முஸ்லிம்).நபி(ஸல்)அவ்ர்கள் பொர் புரிய புறப்படும் போதெல்லாம் ஒரு அற்விப்புச்செய்வார்கள்,"அல்லாஹ்வின் அணியினரே! உங்களில் யாராவது வங்கியக் கடனைதிருப்பித் தர வேண்டியதிருந்தால், போரில் இறந்து போவோம்,கடன் திருப்பித் தரப்படாமலே போய் விடும் என்ற அச்சமும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் திரும்பிப் போய் விடுங்கள்!அவர் போருக்கு என்னோடு வர வேண்டாம்.ஏனெனில் ஒருவன் நரகிலிருந்து விடுதலைப் பெறுவதற்கு இந்த ஜிஹாத் மட்டும் போதாது,(கடனைத் திரும்ப நிறைவேற்றுவதும் அவசியமாகும்(நூல்:ரஸீன்)