Jul 31, 2010

சமூக நல்லிணக்கம்[3

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் வாழ்க்கை முழுதும் ,இது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளமாக உள்ளன. நபியவர்களிடம் வேலைச் செய்த யூத சிறுவன் ஒருவன்,நோய்வாய்ப்பட்டு இருந்தபோது, அவரை நலம் விசாரிக்க அன்னார் சென்ற நிகழ்ச்சி,நபியின் நல்லிணக்கம் மிகுந்த நன் நடத்தையை நினைவூட்டுகிறது.

ஒரு போரிலிருந்து திரும்புகின்ற வழியில் அன்னாருக்கு ஒரு யூதப்பெண் விருந்து கொடுத்த போது அதனை ஏற்றுக்கொண்டு விருந்துண்ண சென்றார்கள், அன்றைய சூழ் நிலையில் முஸ்லிம்களுக்கு பரம விரோதிகள் யூதர்களே; என்ற நிலையிருந்தும், அண்ணலாரின் இந்த சம்மதம்,அன்னாரின் ஐக்கிய உணர்வுக்கு,ஓர் அழகான அடையாளம்,என்று சொல்லலாமல்லவா?.

ஒரு முறை நபிகளாரின் உயிர் நண்பர் அபூ பக்கர் [ரழி] அவர்கள்,யூதர்கள் குழுமியிருந்த இடத்தைக் கடந்து சென்றபோது, சின்ன வாக்குவாதம் ஏற்பட்டு, அபூபக்கர்[ரழி] அவர்கள்,ஃபனுஹாஸ் என்ற ஒரு முக்கிய யூதரை ஓங்கி அறைந்து விட்டார்கள்; இந்த பிரச்சனையை யூதர்கள், நபியவர்களிடம் எடுத்துச்சென்று நியாயம் கேட்டார்கள்; காரணம்; அண்ணலாரின் பாராபச்சமற்ற, பரஸ்பர நடவடிக்கையேயாகும்.

மற்றொரு முறை, ஒரு யூதருக்கும்,முஸ்லிமாக நடித்துக்கொண்டிருந்த ஒருவருக்கும்,நிலம் சம்பந்தமாக ஒரு பிரச்சனை;யூதர்,"முஹம்மதிடம் செல்லாம்,அவர்தான் நியாயமாக தீர்ப்பு வழங்குவார்"எனக் கூறினார். ஆனால் முஸ்லிமாக ஏமற்றிக்கொண்டிருந்த[நயவஞ்சகரான]வர் மற்றவர்களிடம் செல்லலாம்,என அழைத்தார். காரணம்;நபியிடம் சென்றால், நமக்கு நியாயம் கிடைக்கும்.என்று யூதர் நினைத்தார்,ஆனால்;அவர்களிடம் சென்றால்,நமக்கு சாதகமாக[நியாயமின்றி]அவர் தீர்ப்பு வழங்க மாட்டார்.என்று, அந்த நயவ்ஞ்சகர் எண்ணினார்.

இன் நிகழ்ச்சி"மாற்றாரும் கூட முஹம்மத்[ஸல்] அவர்களின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தனர்,என்பதை சித்தரிக்கிறது."நீதிக்கு புறம்பாக தனது சமூகத்துக்கு உதவி செய்பவன்,கிணற்றில் விழும் ஒட்டகத்தின் வாலைப்பிடித்தவன் போலாவான்," என்ற தனது பொன் மொழிக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார்கள், அந்த நபிகள் நாயகம்[ஸல்]அவர்கள்.
நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கையில் ஒரே இறைவன் என்ற கொள்கையை ஓங்கி ஒலித்தார்களே தவிர, மற்ற மக்களால் தெய்வங்களாக நம்பப்படுகிற எதையும் திட்டியதோ அதனை வசை பாடியதோ கிடையாது.காரணம் இது அன்னாரின் நாகரீகம் என்றும் கூறலாம்,அதே சமயம் அல்லாஹ்வின் கட்டளையும் அதுவாகத்தான் இருந்தது.அல்லாஹ் .கூறுகிறான்:[நம்பிக்கையாளர்களே!]அல்லாஹ் அல்லாத எவற்றை அவர்கள் இறைவன் என அழைக்கிறார்களோ அவற்றை நீங்கள் திட்டாதீர்கள்.[6:108] இவ்வசனத்தின் இலக்கணமாகவே இறைத்தூதர் அவர்கள் வாழ்ந்தார்கள். இஸ்லாம் தனது இனிய அணுகு முறைகளால் நாளுக்கு நாள் வளர்ந்த்து வருவதை பொறுக்க முடியாத எதிரிகள் முஸ்லிம்களுக்கு பல இன்னல்களை தந்தனர்,அவற்றை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயச்சூழ் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டனர்.அதனால் உண்டானவைதான் அன்றைய போர்கள்.போர் என்றாலே மனிதம் செத்துப்போய் விடும் என்பதை நாம் அறிவோம். அத்தகைய போரிலும் நபியின் போதனை வித்தியாசமாகவும்,விசித்திரமாகவும் இருக்கும்.போருக்கு புறப்படும் வீரர்களை நோக்கி,"அல்லாஹ்வின் அணியினரே!எதிரிகளின் அணியில் இருக்கும் பெண்களையோ, குழந்தைகளையோ,அந்த பகுதியின் ஆலயங்களிலும் கோவில்களிலும் மக்களுக்கு குருக்களாக இருந்து வணக்கம் நடத்துகின்ற மத போதகர்களையோ கொல்லாதீர்கள்.அந்த மக்களின் வணக்க இடங்களை இடிக்காதீர்கள்.அந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு காரணமாக உள்ள விவசாயங்களை சேதப்படுத்தாதீர்கள்,ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தவர்களைக் கொல்லாதீர்கள்".என்று உபதேசம் செய்வார்கள்.இவை மட்டுமல்ல. இன்னும் அனேக எடுத்துக்காட்டுகள் உள்ளன்.இவையாவும் நமக்கு போதிக்கும் செய்தி ஒன்றுதான்.அதாவது இஸ்லாம் வன்முறை மார்க்கமல்ல,மாறாக,எல்லா வகையிலும் சமூகத்தின் நல்லிணக்கத்தையும் நன்மையையுமே நம் இலட்சியமாகக் கொள்ளவேண்டும்,என்பதே அந்த செய்தி.இதுவே நம் வழியாக மாறினால் நம் வாழ்வு முழுவதும் ஆனந்தம் பொழியும்,பொழிய வேண்டும்.பாடுபடுவோம் வாருங்கள்! [நல்லிணக்கம் தொடரும்.....]

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Alhamdhulillah, I have learned a lesson today. I hope everyone who read did too.

    Inshaallah We, as a ummath of Muhammed Nabi(S.A.W), have to live the life in the way Sallallaahu alaihiwasallam taught/showed us.

    ReplyDelete