Aug 17, 2010

ஈமான்

ஒரு முறை நபி[ஸல்]அவர்களிடம் ஜிப்ரீல்[அலை]அவர்கள் வருகைத்தந்த போது,அன்னாரிடத்தில் நபியவர்கள்,பல கேள்விகளைக் கேட்டார்கள்,அவற்றில் ஒன்று;ஈமான்[விசுவாசம் கொள்ளுதல்]என்றால் என்ன?"என்பதாகும். அதற்கு ஜிப்ரீல்[அலை]அவர்கள் பதில் கூறினார்கள்:ஈமான் என்பது,அல்லாஹ்வையும்,அவனுடைய மலக்கு[வானவர்]களையும்,அவனது வேதங்களையும்,அவனது தூதர்களையும்,மறுமை நாளையும்,நன்மைத்தீமை யாவும் அல்லாஹ்வின் ஏற்பாட்டின்படியே நடைபெறும் என்பதையும்,மனப்பூர்வமாக நம்பி விசுவாசம் கொள்வதாகும். ஒரு முஸ்லிமின் உள்ளத்துக்குள் ஆணி வேர்களாக இருக்க் வேண்டிய அடிப்படை கொள்கைகள் இவை. இந்த நம்பிக்கைகளில் ஒன்றில் சந்தேகம் என்றாலும்,அவனை விசுவாசி[முஃமின்]என்று கூறுவது முடியாததாகும். இந்த நம்பிக்கைகளுடன் நற்செயல்களும் இணைந்திருப்பதும் அவசியமாகும்,அவை;1)வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,முஹம்மத்[ஸல்]அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவர்கள்,என்று நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதி கொள்வதாகும்,2)தினமும் ஐந்து நேரம் தொழுவது,3)ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது,4)தனது பொருள்களைக் கணக்கிட்டு ஜகாத்[ஏழை வரி]கொடுப்பது,5)வசதியுடையவர்கள் ஹஜ் என்ற கடமையை நிறை வேற்றுவது. இவை யாவும் உண்மை விசுவாசியின் இலக்கணமாகும்.இந்த நம்பிக்கையும் விசுவாசமும், சில தன்மைகளை விசுவாசியின் இதயத்தினுள் பதிய வைக்க வேண்டும்,அதுதான் அவனது பூரண நம்பிக்கையின் வெளிப்பாடாகும். எல்லாம் அவனுக்காக, நபி[ஸல்]அவர்கள் அருளினார்கள்:"ஒருவர் கொள்கின்ற விருப்பும்,வெறுப்பும்,அவர் அடுத்தவருக்கு கொடுப்பதும், கொடுக்காமல் தவிர்த்துக் கொள்வதும்,[ஆக அனைத்தும்]அல்லாஹ்வுக்காக என்று ஆகி விட்டால்,அவரது ஈமான் பூரணத்துவம் பெற்றுவிட்டது,"[நூல்:முஸ்லிம்ஈமானின் இனிமை. மூன்று தன்மைகள் யாரிடத்தில் இருக்குமோ, அவர் ஈமானின் சுவையை அடைந்து கொள்வார்;1)மற்ற அனைத்து பொருட்களை விடவும் அல்லாஹ்வும், அவனது தூதரும் அந்த மனிதருக்கு பிரியமானவர்களாக ஆகி விடுவது. 2)யாரை அவர் விரும்பினாலும் அல்லாஹ்வுக்காக விரும்புவது.3)நெறுப்பில் நுழைவது எவ்வளவு வெறுப்பாக இருக்குமோ அந்தளவுக்கு குஃப்ரின்[இறை மறுப்பின்]பக்கம் மீழுவதை அவன் வெறுப்பது.[நூல் :புகாரி] நபி[ஸல்]அவர்கள் ஒரு துஆ வை அடிக்கடி கேட்பார்கள்:யா அல்லாஹ்! எங்களுக்கு ஈமானைப் பிரியமானதாக ஆக்கி வை;. அதை எங்கள் உள்ளங்களில் அலங்காரமாக்கி வை,உன்னை மறுப்பதையும்,பாவங்கள் புரிவதையும்,உனக்கு மாறு செய்வதையும் எங்களுக்கு வெறுப்பானதாக்கி வை,[நூல்:அஹ்மத்

No comments:

Post a Comment