Apr 3, 2014

நபிமார்களை பற்றிய கேள்வி பதில்கள்.

கேள்வி:ஒரு நபி அன்னாரின் தந்தை,தந்தையின் தந்தை,பெரிய தந்தை மற்றும் மகன் அனைவரும் நபிமார்கள் அந்த நபி யார்?
 பதில்:யஃகூப் அலைஹிஸ்ஸலாம்.

 கேள்வி:நபிமார்கள் அனைவரும் திருமணம் முடித்தனர்[நபி ஈஸா[அலை]அவர்களும் கடைசி காலத்தில் மணம் முடித்து வாழ்வர்]ஆனால் மணமுடிக்காத ஒரே நபி யார்? 
பதில்:யஹ்யா[அலைஹிஸ்ஸலாம்.

 கேள்வி:பிறக்கும் முன்பே அல்லாஹ்வினால் பெயர் சூட்டப்பட்ட நபி யார்? பதில்:யஹ்யா[அலை]அவர்கள்.

 கேள்வி:மர்யம்[அலை]அவர்களை வளர்த்த நபி யார்? பதில்:ஜகரிய்யா[அலை]அவர்கள்.

 கேள்வி:இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடக்கவிடம் எங்கே உள்ளது? 
பதில்:ஃபாலஸ்தீனத்தில் அல்ஹிப்றான்[அல்ஃகலீல்]பகுதியில். 

கேள்வி:எந்த நபியின் பெயர் குர்ஆனில் அதிகமாக வருகிறது? பதில்:மூஸா[அலைஹிஸ்ஸலாம்] அவர்களின் பெயர்.

 கேள்வி:முதன் முதலில் சிலை வணக்கத்தை விட்டும் தடுத்து தன் மக்களிடம் பிரச்சாரம் செய்த நபி யார்? 
பதில்:நூஹ்[அலைஹிஸ்ஸலாம்] அவர்கள்.

 கேள்வி:ஜாலூத் என்ற கொடுங்கோல் மன்னனை கொலை செய்த நபி யார்? பதில்:தாவூத்[அலை]அவர்கள்.

 கேள்வி:எந்த நபியின் கூட்டத்தினர் சூறாவளி காற்றினால் அழிக்கப்பட்டனர்?
 பதில்:நபி ஹூத் [அலை]அவர்களின் கூட்டம்.

 கேள்வி:நம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் கடைசியாக வருகை தந்த நபி யார்? 
பதில்:நபி ஈஸா[அலை]அவர்கள்.

 கேள்வி:எந்த பெண்ணின் பிறப்பை பற்றி குர்ஆனில் வந்துள்ளது? 
 பதில்:நபி ஈஸா [அலை]அவர்களின் தாயார் மர்யம் அம்மையார். 

கேள்வி:அளவிலும் நிருவையிலும் குறைவை ஏற்படுத்த வேண்டாம் என தன் கூட்டத்துக்கு உபதேசித்த நபி யார்? 
பதில்:ஷுஐப் [அலை]அவர்கள்.

 கேள்வி:நூஹ் [அலை] அவர்களின் கப்பல் எந்த மலை மீது தரை ஒதுங்கியதாக குர்ஆன் கூறுகிறது? 
 பதில்:ஜூதி மலை மீது.

 கேள்வி:நபி இப்ராஹீம்[அலை]அவர்களுக்கு லூத் [அலை] அவர்கள் என்ன உறவுமுறை? 
 பதில்:இப்ராஹீம் [அலை] அவர்களின் சகோதரர் ஹாறான் என்பவரின் மகன்தான் லூத்[அலை]அவர்கள்.

 கேள்வி:ஸாலிஹ் [அலை] அவர்கள் காட்டிய அற்புதம் என்ன? 
 பதில்;மலை உச்சியிலிருந்து ஒட்டகத்தை அதன் குட்டியோடு வரவழைத்தார்கள்.

8 comments:

  1. எல்லா நபிமார்களும் பொதுவாக செய்த அமல்கள் என்ன கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஹஜ்ரத்

    ReplyDelete
  2. முதல் முதலாக பேன பிடித்த நபி யார்

    ReplyDelete
  3. ஒரு பெண்ணின் அப்பா பாட்டன் பூட்டன் சகோதரன் மகன் கணவன் அனைவரும் நபிமார்கள் அந்த பெண் யார்? அந்த நபிமார்கள் யார்?

    ReplyDelete
  4. 01. மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தார் எத்தனை ஆண்டுகள் பூமியில் தட்டழிந்து திரிவார்கள் என அல்லாஹ் கூறினான்?

    ReplyDelete
  5. அல்-குர்ஆனை ஓதிக் கொண்டு இரவு முழுவதும் கழித்த கலீஃபா யார்

    ReplyDelete