Apr 3, 2014

குர்ஆன் பற்றிய கேள்வி பதில்கள்.

கேள்வி:குர்ஆனில் பெயர் கூறப்பட்ட ஒரே ஸஹாபி யார்? 
பதில்:நபியின் வளர்ப்பு மகன் ஜைத்[ரழி]ஆவார்கள். 

கேள்வி:குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது? 
பதில்:23 வருடங்கள். 

கேள்வி:நபிமார்களின் பெயர் சூட்டப்பட்ட சூராக்கள் குர்ஆனில் எத்தனை?
பதில்:6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்) 

கேள்வி:குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன? பதில்:இருபத்தைந்து நபிமார்கள். 

கேள்வி:குர்ஆனில் முஹம்மது என்றும் அஹ்மது என்றும் எத்தனை இடங்களில் வந்துள்ளன? 
பதில்:முஹம்மது என்று நான்கு இடங்களிலும்,அஹ்மது என்று ஒரே ஒரு இடத்திலும் வருகின்றன.

கேள்வி:குர்ஆனில் அல்ஹம்துலில்லாஹ் என துவங்கும் அத்தியாயம் எத்தனை? 
பதில்:ஐந்து சூராக்கள்.

 கேள்வி: குர்ஆனை தமிழ் மொழியில் முதன் முதலில் தர்ஜுமா [மொழிபெயர்த்தவர்] யார்? 
பதில்:ஹழ்ரத் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி [ரஹ்].

கேள்வி:குர்ஆனையும் தீனையும் கற்றுக்கொடுக்க முதன் முதலில் மதீனாவிற்கு அனுப்பப்பட்ட ஸஹாபி யார்? 
பதில்:முஸ்அப் பின் உமைர்[ரழி]அவர்கள். 

கேள்வி:குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது அதன் ஒவ்வொரு வசனத்திலும் “அல்லாஹ்”என்ற வார்த்தை வந்துள்ளது,அது எந்த சூரா? பதில்:சூரா அல் முஜாதலா. 

கேள்வி:உமர்[ரழி]அவர்களின் மன மாற்றத்திற்கு காரணமான வசனம் எந்த சூராவில் உள்ளது? 
பதில்:சூரா தாஹா.

 கேள்வி:குர்ஆனின் மத்திய பகுதி எந்த சூராவில் உள்ளது? 
பதில்:சூரா கஹ்ஃபு. 

கேள்வி:ஒரு கிழமையை பெயராக கொண்ட சூரா எது? 
பதில்:சூரா அல்ஜும்ஆ. 

கேள்வி:எந்த பறவை பேசியதாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். பதில்:ஹுத் ஹுத் பறவை. 

கேள்வி:நபியின் வஃபாத்துக்கு பின் குர்ஆனை கோர்வை செய்ய ஆணையிட்டது யார்? 
பதில்:அபூபக்கர்[ரழி]அவர்கள். 

கேள்வி:நபிக்கு அடுத்த படியாக குறைஷிகளுக்கு முன்பாக முதன் முதலில் குர்ஆனை ஓதிக்காட்டியவர் யார்? 
பதில்:அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்[ரழி]அவர்கள்.

8 comments:

  1. கண்ணியத்திற்குரிய உலாமப் பெருந்தகையின் சமூகத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும் ,

    தமிழக இஸ்லாமிய சமூகத்தை கூறுபோடும் வஹாபிய இயக்கங்களில் தப்லீக் ஜமாஅத்தின் வஹாபிய மூகமூடியை தோலுரிக்கும் வண்ணம் ஒரு சிறிய முயற்சியாக ஒரு பதிவுதளம் உருவாக்கியுள்ளேன் . http://tableeghijamaathtamil.blogspot.com/

    இந்த பதிவில் ஏதேனும் எழுத்துப் பிழைகளோ அல்லது மொழிபெயர்ப்பு பிழைகளோ இருந்தால் வாசகர்களும் , சங்கைக்குரிய உலமாப் பெருமக்களும் சுட்டிக் காட்ட வேண்டுகின்றோம் .
    அவ்வண்ணமே திருத்தம் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.
    வல்ல ரஹ்மான் இந்த சிறிய முயற்சியை அவன் ஹபீபாகிய எம் உயிரினும் மேலான கண்மணி நாயகம்(ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் பொருட்டால் ஏற்றுக்கொள்வானாக .

    யா அல்லாஹ் ! உண்மையை உண்மை என்று நாங்கள் உணர்ந்து அவ்வுண்மையை நாங்கள் பின்பற்றி நடக்கும்படி உணர்த்தி நேர்வழி காட்டியருள் !
    பொய்யை பொய் என நாங்கள் உணர்ந்து அப்பொய்யை விட்டு அகன்று நடக்கும்படியாக விளக்கப்படுத்தி நேர்வழி காட்டியருள் !
    ஆமீன் !!!




    ReplyDelete
  2. quranil koorapadum 4 thaimarkal name

    ReplyDelete
  3. பிறப்பதற்கு முன்னர் குரானில் பெயரிடப்பட்ட நபிமார்கள் யார்?

    ReplyDelete
  4. அல் குர்ஆனில் தஸ்பீஹ் உடன் ஆரம்பிக்கும் சூராக்கள் எத்தனை?அவை எவை?

    ReplyDelete
  5. முழு குர்ஆன் ஷரீஃபிலும் எத்தனை இடங்களில் "பிஸ்மில்லாஹ்" என்று வருகின்றது.....?

    ReplyDelete
  6. Quranil athihamaha koorapatta nabiyin name.....?

    ReplyDelete
  7. அல் குர்ஆனில் ا அலிப் எழுத்துக்களின் எண்ணிக்கை எத்தனை

    ReplyDelete
  8. நபி ஸல் அவர்கள் இறுதியாக ஓதிய துஆ என்ன?

    ReplyDelete